×

உலகம் சுற்றும் டீக்கடை வாலிபன்… இது நீங்கள் நினைக்கும் ஆள் அல்ல!

இந்த உலகம் சுற்றும் டீக்கடைக்காரரின் பெயர் விஜயன்.வயது 67.மனைவி பெயர் மோகனா,அவரும் அறுபது வயதைத் தாண்டியவர்தான்.எர்ணாகுளம் கடமந்தாராவில் பாலாஜி காஃபிஷாப் என்கிற பெயரில் டீக்கடை நடத்தும் விஜயனும் அவர் மனைவியும் இதுவரை 18க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போய்வந்திருக்கிறார்கள்.எல்லாம் அவர்களுடைய டீக்கடை வருமானத்திலிருந்துதான் இந்த உலகம் சுற்றும் டீக்கடைக்காரரின் பெயர் விஜயன்.வயது 67.மனைவி பெயர் மோகனா,அவரும் அறுபது வயதைத் தாண்டியவர்தான்.எர்ணாகுளம் கடமந்தாராவில் பாலாஜி காஃபிஷாப் என்கிற பெயரில் டீக்கடை நடத்தும் விஜயனும் அவர் மனைவியும் இதுவரை 18க்கும் மேற்பட்ட
 

இந்த உலகம் சுற்றும் டீக்கடைக்காரரின் பெயர் விஜயன்.வயது 67.மனைவி பெயர் மோகனா,அவரும் அறுபது வயதைத் தாண்டியவர்தான்.எர்ணாகுளம் கடமந்தாராவில் பாலாஜி காஃபிஷாப் என்கிற பெயரில் டீக்கடை நடத்தும் விஜயனும் அவர் மனைவியும் இதுவரை 18க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போய்வந்திருக்கிறார்கள்.எல்லாம் அவர்களுடைய டீக்கடை வருமானத்திலிருந்துதான்

இந்த உலகம் சுற்றும் டீக்கடைக்காரரின் பெயர் விஜயன்.வயது 67.மனைவி பெயர் மோகனா,அவரும் அறுபது வயதைத் தாண்டியவர்தான்.எர்ணாகுளம் கடமந்தாராவில் பாலாஜி காஃபிஷாப் என்கிற பெயரில் டீக்கடை நடத்தும் விஜயனும் அவர் மனைவியும் இதுவரை 18க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போய்வந்திருக்கிறார்கள்.எல்லாம் அவர்களுடைய டீக்கடை வருமானத்திலிருந்துதான்.

ஒரு முறை நண்பர்களோடு திருப்பதி போயிருந்திருக்கிறார் விஜயன்.அங்கே பெருமாளை சேவிக்க கியூவில் நின்றபோது தலைக்கு மேல் பறந்த ஒரு விமானத்தைப் பார்த்த விஜயன்,அதுல ஒரு நாள் பறக்கனும் என்று சொல்லியிருக்கிறார்.அதெல்லாம் பெரிய பணக்காரர்களுக்கு நமக்கல்ல என்று நண்பர்கள் சிரிக்க, அன்றே விஜயன் தீர்மானித்துவிட்டார்.

ஊருக்குத் திரும்பியதும் பதினைந்து நாட்களில் தனக்கும் மனைவி மோகனாவுக்கும் பாஸ்போர்ட் வாங்கிவிட்டார்.இந்த தம்பதிகளுக்கு இருந்த இரண்டு பெண்குழந்தைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் விஜயனும்,மோகனாவும் உல்லாசப் பறவைகளாகி திசையெங்கும் பறந்து திரியத்துவங்கி இருக்கிறார்கள்.

2002-ல்தான் முதல்பயணம்.இதுவரை குவைத்,சிங்கப்பூர், எகிப்து,ஃப்ரான்ஸ், ஆஸ்த்திரேலியா,ஸ்விட்சர்லாந்து என்று 18-க்கும் மேற்பட்ட பயணங்கள் போய்வந்து விட்டனர்.இவர்களைப் பற்றி ‘இன்விசிபில் விங்ஸ்’ என்று ஒரு குறும்படம்கூட எடுத்திருக்கிறார்கள்.இப்போது கேரளத்தில் வி.ஐ.பி-களாகிவிட்ட விஜயனுக்கும் மோகமாவுக்கும் நிறைய வி.வி.ஐ.பி-க்கள் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்கள். 

அமிதாப் பச்சன், அனுபம் கெர்,காங்கிரஸ் தலைவர் சசி தரூர் என்று பலரும் இவர்களுக்கு உதவி இருக்கிறார்கள். ஆனாலும்,இவர்கள் மிகவும் சிக்கனமாகவே பயணம் செய்கிறார்கள். திரும்பி வந்ததும் தங்கள் கடையில் வைக்க ஏதேனும் ஒரு நினைவுப்பொருள் தவிர எதுவும் வாங்குவதில்லை. காலிருக்கும் போதுதானே பயணம் போக முடியும்,கண்ணிருக்கும் போதுதானே காணமுடியும் என்று சொல்லும் இந்த தம்பதிகள்,இதுவரை பார்த்ததில் விஜயனுக்கு பிடித்த நாடு சிங்கப்பூர்.மோகனாவுக்கோ சுவிட்சர்லாந்து. 

இவர்கள் அடுத்து சிறகு விரிக்கத் திட்டமிடுவது தென் அமெரிக்க  நாடான சிலியை நோக்கி.டீக்கடைக்கும் வெளிநாட்டு டூருக்கும் ஏதோ லின்க் இருக்குமோ!