×

உலகப் புகழ்பெற்ற செஃப் விகாஷ் கண்ணா ரம்சான் விரதமிருப்பது ஏன் தெரியுமா?

விகாஷ் கண்ணாவுக்கு சொந்த ஊர் அமிர்தசரஸ்.அங்கே பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் வளர்ந்த விகாஷ் கண்ணா கடந்த 26 ஆண்டுகளாக,ரம்சான் மாதத்தில் ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்து வருகிறார்.அதன் பின்னணியில் இருப்பது ஒரு இஸ்லாமிய குடும்பம். விகாஷ் கண்ணாவுக்கு சொந்த ஊர் அமிர்தசரஸ்.அங்கே பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் வளர்ந்த விகாஷ் கண்ணா கடந்த 26 ஆண்டுகளாக,ரம்சான் மாதத்தில் ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்து வருகிறார்.அதன் பின்னணியில் இருப்பது ஒரு இஸ்லாமிய குடும்பம். இதுபற்றி கண்ணா,தன்னை ஒரு தொலைக்காட்சிக்காக பேட்டி
 

விகாஷ் கண்ணாவுக்கு சொந்த ஊர் அமிர்தசரஸ்.அங்கே பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் வளர்ந்த விகாஷ் கண்ணா கடந்த 26 ஆண்டுகளாக,ரம்சான் மாதத்தில் ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்து வருகிறார்.அதன் பின்னணியில் இருப்பது ஒரு இஸ்லாமிய குடும்பம்.

விகாஷ் கண்ணாவுக்கு சொந்த ஊர் அமிர்தசரஸ்.அங்கே பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் வளர்ந்த விகாஷ் கண்ணா கடந்த 26 ஆண்டுகளாக,ரம்சான் மாதத்தில் ஒரு நாள் உண்ணா நோன்பு இருந்து வருகிறார்.அதன் பின்னணியில் இருப்பது ஒரு இஸ்லாமிய குடும்பம்.

இதுபற்றி கண்ணா,தன்னை ஒரு தொலைக்காட்சிக்காக  பேட்டி காண வந்த அனுபம் கெர்ரிடம் சொல்ல அந்த உணர்ச்சிகரமான தொலைக்காட்சி பேட்டியால் இருபத்தாறு வருடங்களாகத் தேடிக்கொண்டு இருந்த இஸ்லாமிய குடும்பத்தினரை கண்டுபிடித்து விட்டார்!. இந்த ரம்சான் தினத்தை அவர்களோடு கொண்டாடி,இது என் வாழ்க்கையின்  மிகவும் மகிழ்ச்சியான தினம் என்று சொல்லியிருக்கிறார் கண்ணா?

என்னதான் நடந்தது? 1992 மும்பைக் கலவரம் நினைவிருக்கிறதா? அன்று கண்ணாவுக்கு 22 வயது.அவர் மும்பை  ஷெரட்டன்  சீ ராக் ஹோட்டலில் பயிற்சியில் இருந்த காலம்.சரியாக அவர் ஷிப்ட் முடிந்து கிளம்பும் போது மும்பையில் மதக்கலவரம் வெடித்த செய்தி வருகிறது.யாரும் வெளியில் போகவேண்டாம் என்று சொல்லி விட்டது,ஹோட்டல் நிர்வாகம். 

அன்று இரவு அங்கேயே தங்கிவிட தீர்மானித்த கண்ணாவிடம் யாரோ காட்கோபர் பக்தியில் பெரும் கலவரமும் தீ வைப்பும் நடக்கிறது என்று சொல்ல விகாஸ் கண்ணா உடனே வெள்யே கிளம்பிவிட்டார்.காரணம் காட்கோபரில்தான் அவருடைய சகோதரர் நிஷாந்த் கண்ணா வசிக்கிறார் என்பதுதான்.கலவர்த்தால் மின்சாரம் இல்லை,போக்குவரத்து இல்லை.இருளில் கால்போன போக்கில் நடந்து வழிதவறி சுற்றிக்கொண்டு இருந்த கண்ணா ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் கண்ணில் பட அவர்கள் அவரை விசாரித்திருக்கிறார்கள்.

அவர் சொன்ன விபரங்களை கேட்டதும் வெளியில் தனியாக சுற்றுவது ஆபத்து என்று சொல்லி தங்கள் வீட்டுக்குள் அழைத்துபோய் தங்கவைத்து விட்டு ,அவரது சகோதரர் நிஷாந்த் கண்ணா பற்றி விசாரிக்க ஆட்களையும் அனுப்பி இருக்கிறார்கள். இதற்குள் அந்த வீட்டுக்கு ஒரு கலவரக் கும்பல் வந்து விசாரிக்க அவர்கள் விகாஷ் கண்ணாவை எங்கள் மகன் என்று தைரியமாக பொய் சொல்லி காப்பாற்றி இருக்கிறார்கள்.அடுத்த நாளும் அவரை அவர்கள் வெளியே போக அனுமதிக்கவில்லை.இதற்குள் அவரது சகோதரர் நிஷாந்த் பாதுகாப்பாக இருக்கும் செய்தியும் வந்துவிட்டது.
கலவரம் கட்டுக்குள் வந்த பிறகு விகாஷ் கண்ணா ஷெரட்டனுக்குத் திரும்பிவிட்டார். அதன் பிறகு விகாஷ் உலகப்புகழ் பெற்ற செஃப் ஆகி பெரும் கோடீசுவரரும் ஆகிவிட்டார்.இப்போது நியூயார்க் நகரில் வசிக்கும் கண்ணா தயாரித்த ‘ஹோலி கிச்சன்’ ஹார்வர்ட், பிரின்ஸ்டன்,ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக மாணவர்களுக்கு பாடமாகிவிட்டன.

அவர் இயக்கிய டாக்குமெண்ட்டரிகள் உலகப்படவிழாக்களில் திரையிடப்படுகின்றன.இந்த நேரத்தில்தான் அனுபம் கெர் அவரை நேர்கானல் செய்த தொலைக்காட்சி நிகழ்வில் இந்த கண்ணீர்கதையை சொல்ல,அந்த குடும்பத்தினர் கண்டுபிடிக்கபட்டு விட,விகாஷ கண்ணா அவர்களை கடந்த ஜூன் மாதத்தில் சந்தித்து விட்டார்.கண்ணீருடன் அந்த பயங்கர இரவை பற்றி பேசினோம்.எனது 26 வருட நோன்பு வீன் போகவில்லை ,இந்த ஆண்டு ரம்சான் பண்டிகையை நான் அவர்களோடுதான் கழிக்க போகிறேன் என்று சொல்லியிருக்கிறார் விகாஷ் கண்ணா.