×

உ.பி. துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. சில பகுதிகளில் போராட்டங்கள் கலவரமாக வெடித்தது. உத்தரப் பிரதேசத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் போராட்டத்தை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து போராட்ட களங்கள் போர்களமாக மாறியது. வாகனங்களுக்கு தீ
 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. சில பகுதிகளில் போராட்டங்கள் கலவரமாக வெடித்தது.

உத்தரப் பிரதேசத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களின் போராட்டத்தை தடுக்க அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உத்தர பிரதேசத்தின் பல மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.


இதையடுத்து போராட்ட களங்கள் போர்களமாக மாறியது. வாகனங்களுக்கு தீ வைப்பு உள்பட பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் கலவரத்தை தடுக்க எடுத்த நடவடிக்கையில் கடந்த 3 நாட்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 879 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 164 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.