×

உங்களுக்கெல்லாம் ஐ.ஐ.டி. கிடையாதுன்னு மறைமுகமா சொல்றாங்களோ?

சொந்த காரணங்கள், உடல்நிலை, வேறு கல்லூரிகளுக்கு மாறுதல், வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லுதல், படிக்கும்போதே வேலையில் சேருதல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் படிப்பை நிறுத்தியிருக்கலாம் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விளக்கமளித்தது. நாட்டில் இருப்பதிலேயே மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களாக அடையாளப்படுத்தப்படும் ஐ.ஐ.டிகளில் இருந்து கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 2,461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளனர். இதில் கொடுமை என்னன்னா, வெளியேறிய மாணவர்களில் சரிபாதி பேர் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
 

சொந்த காரணங்கள், உடல்நிலை, வேறு கல்லூரிகளுக்கு மாறுதல், வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லுதல், படிக்கும்போதே வேலையில் சேருதல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் படிப்பை நிறுத்தியிருக்கலாம் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விளக்கமளித்தது.

நாட்டில் இருப்பதிலேயே மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களாக அடையாளப்படுத்தப்படும் ஐ.ஐ.டிகளில் இருந்து கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 2,461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளனர். இதில் கொடுமை என்னன்னா, வெளியேறிய மாணவர்களில் சரிபாதி பேர் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, இந்த 2,461 மாணவர்களில் 57% பேர் டெல்லி மற்றும் காரக்பூர் ஐஐடியிலும், சென்னை ஐஐடியிலிருந்து  190 பேர், அதாவது 47.5% பேர் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மாணவர்கள் இடைநிற்றலுக்கான காரணம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் விஜயாசாய் ரெட்டி கேள்வி எழுப்பினார். சொந்த காரணங்கள், உடல்நிலை, வேறு கல்லூரிகளுக்கு மாறுதல், வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லுதல், படிக்கும்போதே வேலையில் சேருதல் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் படிப்பை நிறுத்தியிருக்கலாம் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விளக்கமளித்தது. ஏற்கெனவே, படிப்புச் சுமை மற்றும் ஜாதிய ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக ஐ.ஐ.டி. மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரிக்கும் சூழலில், இப்போது இந்தமாதிரியான செய்திகள் வருவது நெருடலாக உள்ளது.