×

உங்களுக்கு 18 வயது ஆகிவிட்டதா? அப்ப இத பண்ணுங்க, கொரோனா வராது!

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 3ஆம்தேதி ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான முதற்கட்டம் ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பித்தது. முன்களப் பணியாளர்களும் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கும் மார்ச் 1ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுகுட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவிருக்கிறது.
 

இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 3ஆம்தேதி ஒப்புதல் அளித்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்துவதற்கான முதற்கட்டம் ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பித்தது. முன்களப் பணியாளர்களும் சுகாதாரத் துறையினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கும் மார்ச் 1ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுகுட்பட்டவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவிருக்கிறது. வரும் மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏப்ரல் 28 முதல் விண்ணப்பிக்கலாம். Cowin.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.