×

உ.பி. போராட்டத்தில் 6 பேர் சுட்டு பலி.!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர்
 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்  6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால், மாணவர்கள் வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தியதால் டெல்லி, அசாம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், குஜராத், கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. 

டெல்லியில் போராட்டத்திற்கு இடையே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கர்நாடக மாநிலம் மங்களூரில் போராட்டங்களுக்கு இடையே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உத்தரபிரதேசம் கான்பூரில் போராட்டத்தை ஒடுக்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்தனர்.