×

இளம்பெண் வயிற்றிலிருந்த 1.5 கிலோ எடையுள்ள நாணயங்கள் மற்றும் நகைகள்: அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!

இளம்பெண் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. மேற்கு வங்காளம்: 1.5 கிலோ எடையுள்ள நகை, நாணயங்களை இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் பீர்பம் மாவட்டத்தில் ராம்பூரத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் நாணயங்கள், தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பெண்ணுக்கு
 

இளம்பெண் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது.

மேற்கு வங்காளம்: 1.5 கிலோ எடையுள்ள நகை, நாணயங்களை இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தின் பீர்பம் மாவட்டத்தில் ராம்பூரத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வயிற்றை ஸ்கேன்  செய்து பார்த்தபோது, அதில் நாணயங்கள், தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக அப்பெண்ணுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அதில், மொத்த எடை 1.5 கிலோயுள்ள, ரூ.5, ரூ.10 ஆகிய மதிப்புள்ள  நாணயங்கள், செயின்,  காதணி, வளையல் மற்றும் கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள்  வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டன. 

இதுகுறித்து கூறியுள்ள அப்பெண்ணின் தாயார்,  என் மகளுக்கு மனநலம் சரியில்லை. அவள் கிடைக்கும் பொருட்களையெல்லாம் விழுங்கி வந்தாள். வீட்டில் பல பொருட்கள் காணாமல் போனதால் சந்தேகமடைந்த நாங்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம்’ என்று சோகத்துடன் கூறினார்.