×

இல்லாத புற்றுநோய்க்கு சிகிச்சையளித்த அரசு மருத்துவர்கள்: கடைசியில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் இதுதான்!?

அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு இல்லாத புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோட்டயம்: அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு இல்லாத புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்த்தவர் ரஜினி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எட்டு வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். ரஜினி பந்தளம் பகுதியிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிக்கு மார்பில் கட்டி ஏற்பட்டது. இதற்குச் சிகிச்சை
 

 அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு இல்லாத புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோட்டயம்: அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு இல்லாத புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளா மாநிலம் ஆலப்புழாவை  சேர்த்தவர் ரஜினி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  எட்டு வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். ரஜினி பந்தளம் பகுதியிலுள்ள ஒரு துணிக்கடையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரஜினிக்கு  மார்பில் கட்டி ஏற்பட்டது. இதற்குச் சிகிச்சை பெற அவர் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  இது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். பின்பு ரஜினியின் ரத்தமாதிரி மற்றும் கட்டியின் சிறு பகுதியைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.  பின்பு இங்கு ரிசல்ட் வர சில காலமாகும். அதனால் தனியார் நிறுவன லேப்  சென்டரில் பரிசோதித்து ரிப்போர்ட்டை உடனே  எடுத்து வாருங்கள் என்றதால் அவர்கள் கூறியபடி ரஜினி செய்ய, ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள்  புற்றுநோய் இருப்பதாக  உறுதிப்படக் கூறினர். இதனையடுத்து ரஜினிக்கு ஹீமோதெரபி கொடுக்கப்பட்டது. இதனால் அவருக்கு முடி உதிர்வு அதிகமானது. 

இந்நிலையில் அரசு பரிசோதனை  கூடத்திலிருந்து வந்த  ரிப்போர்டில் ரஜினிக்கு புற்றுநோய் இல்லை என்று முடிவு வந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்,  திருவனந்தபுரத்தில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு ரஜினியின் ரத்தமாதிரி மற்றும் தசைகளை அனுப்பி வைத்தனர். ஆனால்  அங்கேயும் அவருக்குப் புற்றுநோய் இல்லை என்றே முடிவு வந்தது. 

இதனிடையே இல்லாத புற்றுநோய்க்குச் சிகிச்சை பார்த்ததால், ரஜினியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து சிகிச்சை குறித்து உண்மையை அறிந்த ரஜினியின் உறவினர்கள், கோட்டயம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். மேலும் புற்றுநோய் என்று ரிப்போர்ட் வழங்கிய தனியார் லேப்  சென்டரும்  அடித்து நொறுக்கப்பட்டது.  இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . 

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர்   சைலஜா கூறும்போது, ‘ அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட இந்த  தவற்றுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட ரஜினிக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’ என்றார்.