×

இறந்து போன கணவரால் கிடைத்த வாழ்க்கை…60 வயதை கடந்தும் காதல்: இன்னும் சில நாட்களில் முதியோர் இல்லத்தில் திருமணம்!

உறவினர் வீட்டுக்குச்சென்றுள்ளார். ஆனால் கோச்சானியன் அங்கு சென்றும் லட்சுமி அம்மாளை பார்த்து விட்டு வந்துள்ளார். கேரளா மாநிலம் திருச்சூர் அருகே தைக்கட்டுசேரியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (65). இவரது கணவர் கிருஷ்ண அய்யர் கேட்டரிங் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது உதவியாளரான கோச்சானியன் (66) என்பவரை அழைத்து என் மனைவிக்கு உதவியாக இரு என்று கூறினாராம். அன்றிலிருந்து கோச்சானியன் லட்சுமி அம்மாளுக்கு துணையாக இருந்துள்ளார்.
 

உறவினர் வீட்டுக்குச்சென்றுள்ளார். ஆனால் கோச்சானியன் அங்கு சென்றும் லட்சுமி அம்மாளை  பார்த்து விட்டு வந்துள்ளார்.

கேரளா மாநிலம் திருச்சூர் அருகே தைக்கட்டுசேரியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (65). இவரது கணவர் கிருஷ்ண அய்யர் கேட்டரிங் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது உதவியாளரான கோச்சானியன் (66) என்பவரை அழைத்து என் மனைவிக்கு உதவியாக இரு என்று கூறினாராம். அன்றிலிருந்து கோச்சானியன் லட்சுமி அம்மாளுக்கு துணையாக இருந்துள்ளார். அதன் பிறகு லட்சுமி அம்மாள் உறவினர் வீட்டுக்குச்சென்றுள்ளார். ஆனால் கோச்சானியன் அங்கு சென்றும் லட்சுமி அம்மாளை  பார்த்து விட்டு வந்துள்ளார்.

இதன் பிறகு லட்சுமி அம்மாள் உறவினர்களால் ராமவர்மாபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே வேலைநிமித்தமாக கோழிக்கோடு சென்ற கோச்சானியன் சாலையில் மயங்கி விழவே அவரை மீட்ட தன்னார்வ தொண்டு நிர்வாகிகள், வயநாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு  கோச்சானியன் தான் யார் என்ற விவரத்தைக் கூற அவர் உடனடியாக லட்சுமி அம்மாள் இருக்கும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதிலிருந்து  இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்போடு  கவனித்து கொள்கிறார்கள். 

இதுகுறித்து கூறும் லட்சுமி அம்மாள்,  ‘கோச்சானியன் மீண்டும் வந்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நாங்கள் காதலித்தோமா என்று தெரியவில்லை. ஆனால்  நான் அவரை நேசிக்கிறேன். அவரும் என்னை நேசிக்கிறார். நாங்கள் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். இருந்தாலும் எவ்வளவு நாட்கள் சேர்ந்து வாழ்வோம் என்று தெரியவில்லை’ என்றார். 

இவர்கள் குறித்து கூறியுள்ள முதியோர் இல்லத்தின் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இருவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளோம். இதற்காக தனது மேலதிகாரியிடம் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 30-ம் தேதி இருவருக்கும் முதியோர் இல்லத்தில் திருமணம் நடைபெற உள்ளது. ஒரு அரசாங்க முதியோர் இல்லத்தில் முதல் முறையாக இதுபோன்ற திருமணம் நடைபெற இருப்பது இதுவே முதன்முறை என்று கூறி நெகிழ்கிறார்.