×

இருந்த 2 இயக்குனர்களும் போயாச்சு! அஸ்தமனத்தை  நோக்கி செல்லும் ஜெட் ஏர்வேஸ்! ஓரே நாளில் 41 சதவீதம் சரிந்த பங்கு விலை…

ஒரு தனியார் நிறுவனம் விமான சேவையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாபகரமாக இயங்கி வருவது ஒன்றும் அவ்வளவு சாதரணம் காரியமல்ல. அப்படி ஒரு சாதனையை செய்த நிறுவனம்தான் ஜெட் ஏர்வேஸ். ஆனால் அந்த நிறுவனம் இன்று தனது இறுதி அத்தியாதத்தை எழுதி கொண்டு இருக்கிறது என்ற கசப்பான உண்மையை நாம் கண் கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம். ஒரு தனியார் நிறுவனம் விமான சேவையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாபகரமாக இயங்கி வருவது ஒன்றும்
 

ஒரு தனியார் நிறுவனம் விமான சேவையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாபகரமாக இயங்கி வருவது ஒன்றும் அவ்வளவு சாதரணம் காரியமல்ல. அப்படி ஒரு சாதனையை செய்த நிறுவனம்தான் ஜெட் ஏர்வேஸ். ஆனால் அந்த நிறுவனம் இன்று தனது இறுதி அத்தியாதத்தை எழுதி கொண்டு இருக்கிறது என்ற கசப்பான உண்மையை நாம் கண் கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம்.

ஒரு தனியார் நிறுவனம் விமான சேவையில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக லாபகரமாக இயங்கி வருவது ஒன்றும் அவ்வளவு சாதரணம் காரியமல்ல. அப்படி ஒரு சாதனையை செய்த நிறுவனம்தான் ஜெட் ஏர்வேஸ். ஆனால் அந்த நிறுவனம் இன்று தனது இறுதி அத்தியாதத்தை எழுதி கொண்டு இருக்கிறது என்ற கசப்பான உண்மையை நாம் கண் கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம்.

நரேஷ் கோயல்

நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 1993ம் ஆண்டில் இந்திய விமான போக்குவரத்து துறையில் காலடி வைத்தது. அதுமுதல் அந்த நிறுவனத்துக்கு ஏறுமுகம் தான். நரேஷ் கோயல் தொட்டதெல்லாம் துலங்கியது. விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் விரிவுப்படுத்த தொடங்கியது. நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸ் விரிவாக்கத்துக்கு தேவையான நிதியை பங்குச் சந்தைகளில் பங்கு வெளியிட்டு திரட்ட முடிவு செய்தார்.

2005 ஏப்ரல் 26ம் தேதி பங்குச் சந்தைகளில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் வெளியிடப்பட்டன. அப்போது ஒரு பங்கின் வெளியிட்டு விலை ரூ.1,100ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அன்று வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.1,379க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு அந்த பங்கின் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றாக சென்று கொண்டு இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 2008ம் ஆண்டு யாருமே எதிர்பாராத பெரிய அதிர்ச்சி தாக்கியது. அதாங்க அந்த ஆண்டில் ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை அந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

சமாளிக்க கடன்

அதுமுதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட தொடங்கியது. அதனை சமாளிக்க கொஞ்சம் கடன் வாங்கி காலத்தை கடத்தியது. நிறுவனம் நல்லா செயல்படுவது போல் வெளியே தெரிந்தாலும் உண்மை நிலவரம் அதுவல்ல என்பது சில ஆண்டுகள் சென்ற பிறகு தான் தெரியவந்தது. 2015ம் ஆண்டு முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்க தொடங்கியது. பல வங்கிகளிடம் கடனை வாங்கி அந்த நிறுவனம் தனது நிதி நிலைமை சமாளித்தது.

இந்த சூழ்நிலையில், கடன் கொடுத்த நிறுவனங்கள், வங்கிகள் கொடுத்த கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுக்க தொடங்கின. நரேஷ் கோயல் உள்ளிட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கடன் கொடுத்த வங்கிகள் ஸ்டேட் வங்கி தலைமையில் கூடி ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை கைப்பற்றின. அதன் பிறகாவது ஜெட் ஏர்வேஸ் பழைய நிலைமைக்கு திரும்பும் என்று எதிர்பார்த்தால் ஸ்டேட் வங்கி அந்த நினைப்பில் மண்ணை வாரி போட்டது.

திவால் நடவடிக்கை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தும்படி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஸ்டேட் வங்கி மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே இந்த செய்தி மற்றும் ஜெட் ஏர்வேஸ் இயக்குனர்கள் குழுவில் 2 இயக்குனர்களும் விலகிய தகவல் வெளியே வந்த காரணத்தால் நேற்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு விலை நேற்று ஒரே நாளில் 41 சதவீதம் குறைந்தது.

பயத்தில் முதலீட்டாளர்கள்

கடந்த திங்கட்கிழமையன்று பங்கு வர்த்தகத்தின் முடிவில் ஜெட் ஏர்வேஸின் பங்கு விலை 68.30 ரூபாயில் முடிவுற்று இருந்தது. நேற்று பங்குச் சந்தையில் தொடக்கத்திலேயே அந்த பங்கின் விலை கடும் சரிவுடனேயே ரூ.61.50ஆக தொடங்கியது. முதலீட்டாளர்கள் பயத்தில் தங்களது கையில் இருந்த பங்குகளை விற்பனை செய்ய தொடங்கினர். இதனால் அந்த பங்கின் விலை ஒரு கட்டத்தில் ரூ.32.25க்கு சென்றது. வர்த்தகத்தின் முடிவில் அந்த பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தின் முடிவு விலையை காட்டிலும் சுமார்  41 சதவீதம் குறைந்து ரூ.40.45-ல் முடிவுற்றது.