×

இரண்டாம் உலகப்போரில் இறந்த இரண்டு இந்திய வீரர்களின் உடல் கண்டுபிடிப்பு..!

இரண்டாவது உலக போரின்போது இந்தியா பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்தது,25 லட்சம் இந்தியர்கள் இங்கிலாந்துக்காக உலகம் முழுவதும் போய் போரிட்டனர் இரண்டாவது உலக போரின்போது இந்தியா பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்தது,25 லட்சம் இந்தியர்கள் இங்கிலாந்துக்காக உலகம் முழுவதும் போய் போரிட்டனர். அப்படி இத்தாலியில் நடைபெற்ற போரில் இறந்து போன இரண்டு இந்திய வீரர்களின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 75 வருடம் முன்பு நடந்த இரண்டாம் உலகப்போரில் இந்தியாவிலிருந்து
 

இரண்டாவது உலக போரின்போது இந்தியா பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்தது,25 லட்சம் இந்தியர்கள் இங்கிலாந்துக்காக உலகம் முழுவதும் போய் போரிட்டனர்

இரண்டாவது உலக போரின்போது இந்தியா பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்தது,25 லட்சம் இந்தியர்கள் இங்கிலாந்துக்காக உலகம் முழுவதும் போய் போரிட்டனர். அப்படி இத்தாலியில் நடைபெற்ற போரில் இறந்து போன இரண்டு இந்திய வீரர்களின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

75 வருடம் முன்பு நடந்த இரண்டாம் உலகப்போரில் இந்தியாவிலிருந்து சென்ற வீரர்களில் 87000 பேர் அந்நிய மண்ணில் பலியாயினர்.34354 பேர் காயமடைந்தனர். 67340 பேர் எதிரிகளால் சிறைப் பிடிக்கப்பட்டனர். இந்திய படைகளை நிர்வகித்த ஃபீல்டு மார்ஷல் க்ளூடே ஆஞ்சிலெக் இந்திய வீரர்கள் உதவியில்லாமல் நாம் இந்தப் போரை வென்றிருக்க முடியாது என்றார்.

ஆனால், எங்கோ இத்தாலிய மண்ணில் செத்து விழுந்த இந்திய வீரர்களின் உடல் அங்கே இருக்கும் பெயரில்லா கல்லறையில் புதைக்கப்பட்ட இரண்டு இந்திய வீரர்களின் உடல் நவீன டி.என்.ஏ தொழில் நுட்பத்தால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டனர்.முதல்க்கட்ட சோதனையில் போகியோ ஆல்ட்டோ கல்லறையில் இருந்த உடல்களில் இருவர் ஐரோப்பியர் அல்ல என்று தெரிய வந்தது.

அந்த பகுதியில் ஐரோப்பியர் அல்லாதோர் என்றதும் இந்திய ராணுவத்தின் 4 பட்டாலியனின் 13 வது எல்லை பாதுகாப்பு படையில் இருந்து இறந்து போன லாலு ராம் (19) ஹரி சிங் ( 18) ஆகிய இரண்டு சிப்பாய்களின் உறவினர்களின் டி.என்.ஏ சாம்பிள் எடுக்கப்பட்டு ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது.

75 ஆண்டுகளுக்கு முன்பு,இத்தாலியில் புதைக்கப்பட்ட அந்த வீரர்களின் உடல்கள் இந்தியா கொண்டுவரப்பட்டு அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் வசிக்கும் வீரர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.