×

இமாச்சல் பிரதேச நிலச்சரிவால் மாட்டிக்கொண்ட மஞ்சு வாரியர் மீட்பு!

நிலச்சரிவால் மலைப்பாதைகள் மூடிக்கொள்ள, அங்கிருந்து வெளியேற முடியாமல் கடந்த ஆறு நாட்களாக விடுதி அறைக்குள்ளேயே அனைவரையும் முடக்கிவிட்டது. கேரளாவில் இருக்கும் வாரியரின் சகோதரருக்குச் செய்தியைச் சொல்லி, அவர் அங்கிருந்து பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து, அதன்பின் மீட்புக்குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டு மணாலியில் கொண்டுவந்து பத்திரமாக விட்டுவிட்டனர். இமாச்சல பிரதேசம், சாத்ரு மலைப்பகுதியில் கடந்த ஒருவாரம் பத்து நாளாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு. பகுதி மக்களுக்கு மட்டுமன்றி, சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் இடராக அமைந்துவிட்டது. இந்த களேபரத்தில், அப்பகுதிக்கு படப்பிடிப்புக்காகச்
 

நிலச்சரிவால் மலைப்பாதைகள் மூடிக்கொள்ள, அங்கிருந்து வெளியேற முடியாமல் கடந்த ஆறு நாட்களாக விடுதி அறைக்குள்ளேயே அனைவரையும் முடக்கிவிட்டது. கேரளாவில் இருக்கும் வாரியரின் சகோதரருக்குச் செய்தியைச் சொல்லி, அவர் அங்கிருந்து பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து, அதன்பின் மீட்புக்குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டு மணாலியில் கொண்டுவந்து பத்திரமாக விட்டுவிட்டனர்.

இமாச்சல பிரதேசம், சாத்ரு மலைப்பகுதியில் கடந்த ஒருவாரம் பத்து நாளாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு. பகுதி மக்களுக்கு மட்டுமன்றி, சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் இடராக அமைந்துவிட்டது. இந்த களேபரத்தில், அப்பகுதிக்கு படப்பிடிப்புக்காகச் சென்ற மஞ்சு வாரியர் மற்றும் 30 பேர்கொண்ட படக்குழுவினரும் சிக்கிக்கொணடனர். நிலச்சரிவால் மலைப்பாதைகள் மூடிக்கொள்ள, அங்கிருந்து வெளியேற முடியாமல் கடந்த ஆறு நாட்களாக விடுதி அறைக்குள்ளேயே அனைவரையும் முடக்கிவிட்டது. கேரளாவில் இருக்கும் வாரியரின் சகோதரருக்குச் செய்தியைச் சொல்லி, அவர் அங்கிருந்து பிடிக்கவேண்டியவர்களைப் பிடித்து, அதன்பின் மீட்புக்குழுவினர் உடனடியாக அவர்களை மீட்டு மணாலியில் கொண்டுவந்து பத்திரமாக விட்டுவிட்டனர்.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள மஞ்சு வாரியர் “கயட்டா படக்குழுவைச் சேர்ந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டோம், எங்களை உடனடியாக மீட்ட அதிகாரிகளுக்கும், எங்களின் நலன்குறித்து கவலைப்பட்ட, கடவுளிடம் வேண்டிக்கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார். வாரியர், படக்குழுவினர், மற்றும் சிலர் என மொத்தம் 127 பேர் சாத்ரு நிலச்சரிவில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துவந்ததனர் என்பது குறிப்பிடத்தக்கது.