×

இப்பவே ரெடியா ஆகுங்க! பங்குச் சந்தைக்கு வருகிறது ரிலையன்ஸ் ஜியோ

முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் ஜியோவை பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக தகவல். 2020ம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய பங்கு வெளியிட்டில் ஜியோ களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறையில் பல அதிரடி புரட்சிகளை ஏற்படுத்தியது யார் என்று கேட்டால் அம்பானி குடும்பம்தான் என்று சின்ன குழந்தையும் சொல்லிவிடும். 15 வருஷத்துக்கு முன்பு 500 ரூபாய்க்கு செல்போனை கொடுத்து சாமானிய மனிதனையும் பேச வைத்தவர் அனில் அம்பானி. அவரது அண்ணன் முகேஷ் அம்பானியோ செல்போனில் இன்டர்நெட்டை மலிவு
 

முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் ஜியோவை பங்குச் சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக தகவல். 2020ம் ஆண்டின் பிற்பகுதியில் புதிய பங்கு வெளியிட்டில் ஜியோ களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு துறையில் பல அதிரடி புரட்சிகளை ஏற்படுத்தியது யார் என்று கேட்டால் அம்பானி குடும்பம்தான் என்று சின்ன குழந்தையும் சொல்லிவிடும். 15 வருஷத்துக்கு முன்பு 500 ரூபாய்க்கு செல்போனை கொடுத்து சாமானிய மனிதனையும் பேச வைத்தவர் அனில் அம்பானி. அவரது அண்ணன் முகேஷ் அம்பானியோ செல்போனில் இன்டர்நெட்டை மலிவு விலைக்கு கொடுத்து அனைவரையும் செல்லும் கையுமாக அலைய வைத்து விட்டார். 

2016ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாயிலாக இந்திய தொலைதொடர்ப்பு துறையில் காலடி வைத்தார். அதன் பிறகு இந்திய தொலைத் தொடர்ப்பு துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஜியோவின் போட்டியை சமாளிக்க முடியாமல் சிறு நிறுவனங்கள் கடையை காலி செய்தன. பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா போன்ற ஒரு சில நிறுவனங்களே ஜியோவை சமாளித்து வருகின்றன.

ஜியோ நிறுவனம் தற்போது அதிக மொபைல் இணைப்புகளை கொண்ட டாப் 3 நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை புதிய பங்கு வெளியீட்டில் களம் இறக்க முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் ஜியோ நிறுவனத்தை பட்டியலிடுவது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் முகேஷ் அம்பானி பேசியதாக தகவல் கசிந்துள்ளது. 2020ம் ஆண்டில் ஜியோ நிறுவனத்தை பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் வாய்ப்பு உள்ளதாக தகவல். அதனால் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யணும்ன்னு நினைக்கிறவங்க இப்பவே ரெடியா ஆகுங்க.