×

இப்படி ஆகி போச்சே! கவலையில் மாருதி சுசுகி நிறுவனம்

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,359 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 39 சதவீதம் குறைவாகும். பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் 2019 செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. மாருதி சுசுகி இந்தியா நிறுவனமும் தனது ஜூலை-செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. கார் விற்பனை சரிவு அந்நிறுவனத்தை கடுமையாக பாதித்துள்ளது நிதி நிலையில் தெளிவாக எதிரொலித்தது. இந்த நிதியாண்டின் இரண்டாவது
 

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக ரூ.1,359 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 39 சதவீதம் குறைவாகும்.

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் 2019 செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. மாருதி சுசுகி இந்தியா நிறுவனமும் தனது ஜூலை-செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை  வெளியிட்டுள்ளது. கார் விற்பனை சரிவு அந்நிறுவனத்தை கடுமையாக பாதித்துள்ளது நிதி நிலையில் தெளிவாக எதிரொலித்தது.

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,359 கோடி மட்டுமே சம்பாதித்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்துக்கு நிகர லாபமாக ரூ.2,240 கோடி கிடைத்து இருந்தது. ஆக 2019 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 39 சதவீதம் குறைந்துள்ளது.

2019 செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் மொத்தம் 3.38 லட்சம் கார்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 30 சதவீதம் குறைவாகும். விற்பனை குறைந்ததால் அந்த காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வருவாயும் சரிவு கண்டுள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 24.3 சதவீதம் குறைந்து ரூ.16,985 கோடியாக சரிவடைந்தது.