×

இன்று இந்தியா வரும் டொனால்ட் டிரம்ப்பின் சுற்றுப்பயண விவரம் இதுதான்!

இன்று திறந்து வைக்கிறார். இதனால் மத்திய அரசு டிரம்ப் வருகைக்காகப் பல ஏற்பாடுகளை முனைப்புடன் செய்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று திறந்து வைக்கிறார். இதனால் மத்திய அரசு டிரம்ப் வருகைக்காகப் பல ஏற்பாடுகளை முனைப்புடன் செய்துள்ளது. நண்பகல் 11.40 மணிக்கு குஜராத்திற்கு வரும் மனைவி மெலனியாவுடன் வருகை புரியும் டிரம்ப்பை விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை லட்சக்கணக்கானோர் பங்கேற்று
 

இன்று   திறந்து வைக்கிறார். இதனால் மத்திய அரசு டிரம்ப் வருகைக்காகப் பல ஏற்பாடுகளை முனைப்புடன் செய்துள்ளது. 

 குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று   திறந்து வைக்கிறார். இதனால் மத்திய அரசு டிரம்ப் வருகைக்காகப் பல ஏற்பாடுகளை முனைப்புடன் செய்துள்ளது. 

நண்பகல் 11.40 மணிக்கு குஜராத்திற்கு வரும்  மனைவி மெலனியாவுடன் வருகை புரியும் டிரம்ப்பை விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை  லட்சக்கணக்கானோர் பங்கேற்று  வரவேற்கவுள்ளனர்.

2.15 மணிக்கு சபர்மதி ஆசிரமம் செல்கிறார். பின்னர் பிற்பகல் 1.05 மணியளவில், ஒரு லட்சம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

இதையடுத்து மாலை 3.30 மணிக்கு குஜராத்திலிருந்து புறப்பட்டு 4.45 மணிக்கு ஆக்ரா சென்று தாஜ்மகாலை பார்வையிடுகிறார். பின்னர்  7.30 மணிக்கு டெல்லிக்கு செல்கிறார். அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கும் அவருக்கு நாளை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில்  அரசு முறை வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.