×

இன்போசிஸ் கொடுத்த சர்ப்ரைஸ் ரிசல்ட்…. 17ம் தேதி வெளியாகும் டி.சி.எஸ். முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள்…

டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (டி.சி.எஸ்.) டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வரும் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளிவர உள்ளது. முதலீட்டாளர்கள் டி.சி.எஸ். முடிவுகளை அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளை தற்போது வெளியிட தொடங்கி விட்டன. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் நேற்றுமுன்தினம் தனது டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த நிகரலாபமாக ரூ.4,466
 

டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (டி.சி.எஸ்.) டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வரும் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளிவர உள்ளது. முதலீட்டாளர்கள் டி.சி.எஸ். முடிவுகளை அதிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த டிசம்பர் காலாண்டு முடிவுகளை தற்போது வெளியிட தொடங்கி விட்டன. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி. சேவைகள் நிறுவனமான இன்போசிஸ் நேற்றுமுன்தினம் தனது டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டது. 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் ஒட்டு மொத்த நிகரலாபமாக ரூ.4,466 கோடியை ஈட்டியிருந்தது. இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 24 சதவீதம் அதிகமாகும்.

இன்போசிஸ் நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இருந்ததால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப மற்ற ஐ.டி. சேவை துறையை சேர்ந்த நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் முன்னணி மற்றும் மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் நிதி நிலை முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

டி.சி.எஸ். நிறுவனத்தின் நிர்வாக கூட்டம் (போர்டு மீட்டிங்) வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கடந்த டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை டி.சி.எஸ். அறிவிக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்த போது டி.சி.எஸ். பங்கு விலை ரூ.2,213.85ஆக இருந்தது. வரும் நாட்களில் நிதி நிலை தொடர்பான எதிர்பார்ப்புகள் மற்றும் முடிவுகள் டி.சி.எஸ். பங்கு விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.