×

“இனிமேல் 50 ஆண்டுகள் கழித்துத் தான் சபரிமலைக்கு வருவேன்”: பக்தர்களைக் கவர்ந்த 9 வயது சிறுமியின் பதாகை !

சபரி மலையில் 10 வயது முதல் 50 வரை உள்ள பெண்கள் வரக்கூடாது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. சபரி மலைக்கு 10 வயது முதல் 50 வரை உள்ள பெண்கள் வரக்கூடாது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் 7பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியமைத்தது. அதில், பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்பது குறித்த சீராய்வு மனுவின் உத்தரவு வரும் வரை பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம்
 

சபரி மலையில் 10 வயது முதல் 50 வரை உள்ள பெண்கள் வரக்கூடாது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.

சபரி மலைக்கு 10 வயது முதல் 50 வரை உள்ள பெண்கள் வரக்கூடாது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் 7பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றியமைத்தது.

அதில், பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்பது குறித்த சீராய்வு மனுவின் உத்தரவு வரும் வரை பெண்கள் சபரிமலைக்குச் செல்லலாம் என்றும் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படாது என்றும் உச்ச நீதி திட்டவட்டமாகத் தெரிவித்தது. பாதுகாப்பு வழங்கப்படாது என்பதையும் மீறி சபரிமலைக்குச் செல்லும் பெண்கள் பம்பையிலேயே பேச்சுவார்த்தை நடத்தித் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், திரிசூரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 9 வயது மகள் கிருத்திகா மாலை அணிவித்து சபரி மலைக்குச் சென்றுள்ளார். அவர் கழுத்தில், ” நான் இனிமேல் 50 வயதைக் கடந்து தான் சபரிமலைக்கு வருவேன்” என்று எழுதப்பட்டிருந்த பதாகையை அணிந்த படி சென்றுள்ளார். பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் இச்சமயத்தில், அந்த சிறுமியின் கருத்து பக்தர்கள் பலரை வெகுவாக கவர்ந்ததால் அந்த சிறுமிக்கு பக்தர்கள் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. 

இதே போலக் கடந்த ஆண்டு, மதுரையைச் சேர்ந்த 9 வயது சிறுமி “இனி நான் 50 வயதில்தான் சபரிமலைக்கு வர முடியும்.மீண்டும் 50 வயதில் நான் சபரிமலைக்கு வருவதற்காக ஆர்வத்துடன் காத்திருப்பேன்’’ என்று எழுதப்பட்டிருந்த பதாகையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு சபரிமலைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.