×

இனி பாரதிய ஜனதா கட்சி அல்ல “பாரதிய உளவு கட்சி”

பாரதிய உளவு கட்சியினர் பயத்தில் சிரிக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் பெகாசஸ் (Pegasus) ஸ்பைவேர் சாப்ட்வேர் மிகவும் அபாயகரமானது. இந்த மென்பொருள் பிரபலமானவர்களின் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைந்து உளவு பார்க்க பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலை சேர்ந்த பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ. 2019ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியது. இது முழுக்க முழுக்க உளவுப் பணிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதனுடைய சிறப்பம்சமே அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் ஆப்பிள் போன்களுக்குள்ளேயே ஊடுருவி தகவல்களைத் திருடகூடியது. தற்போது இந்தியாவில்
 

பாரதிய உளவு கட்சியினர் பயத்தில் சிரிக்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் பெகாசஸ் (Pegasus) ஸ்பைவேர் சாப்ட்வேர் மிகவும் அபாயகரமானது. இந்த மென்பொருள் பிரபலமானவர்களின் ஸ்மார்ட்போன்களுக்குள் நுழைந்து உளவு பார்க்க பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலை சேர்ந்த பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ. 2019ஆம் ஆண்டு இதனை அறிமுகப்படுத்தியது. இது முழுக்க முழுக்க உளவுப் பணிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. இதனுடைய சிறப்பம்சமே அதிகபட்ச பாதுகாப்புடன் இருக்கும் ஆப்பிள் போன்களுக்குள்ளேயே ஊடுருவி தகவல்களைத் திருடகூடியது.

தற்போது இந்தியாவில் உள்ள 40 பத்திரிக்கையாளர்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் செல்போனை இந்த பெகாசஸ் உளவு பார்த்ததாக சொல்லப்படுகிறது. பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “
பாரதிய உளவு கட்சியினர் பயத்தில் சிரிக்கின்றனர்” எனக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.