×

இனி ஓலா, உபர் ஆப்களில் புக்கிங்கை கேன்சல் செய்தால் அபராதம் எவ்வளவு தெரியுமா?

உபர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள் வழக்கத்தை விட 4 முதல் 5 மடங்கு கட்டணம் வசூலிக்கிறது. மத்திய அரசு முதன்முறையாக ஓலா, உபர் போன்ற வாடகை கார் நிறுவனங்களை நெறிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பீக் நேரங்களில் டிராஃபிக்கை கணக்கில் கொண்டு ஓலா, உபர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள் வழக்கத்தை விட 4 முதல் 5 மடங்கு கட்டணம் வசூலிக்கிறது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிகளின் படி, அதிகபட்சமாக
 

உபர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள்   வழக்கத்தை விட 4 முதல் 5  மடங்கு கட்டணம் வசூலிக்கிறது.  

மத்திய அரசு முதன்முறையாக ஓலா, உபர் போன்ற வாடகை கார் நிறுவனங்களை  நெறிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. பீக் நேரங்களில் டிராஃபிக்கை கணக்கில் கொண்டு ஓலா, உபர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள்   வழக்கத்தை விட 4 முதல் 5  மடங்கு கட்டணம் வசூலிக்கிறது.  

இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிகளின் படி, அதிகபட்சமாக பீக் நேரங்களில் இரண்டு மடங்கு தான் கட்டணம் வசூலிக்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் புக்கிங்கை கேன்சல் செய்தால், 10 முதல் 50 சதவிகிதம் வரையில், அதிகபட்சமாக 100 ரூபாய் வரை மட்டுமே அபராதம்  விதிக்கவேண்டும் என்றும்  ஓட்டுநர்கள் புக்கிங்கை கேன்சல் செய்தால் அவர்களிடமிருந்தும்  அதிகபட்சமாக 100 ரூபாய் வரை மட்டுமே அபராதம்   வசூலித்துக் கொள்ளலாம். 

மேலும்  ஓட்டுநர்  ஒரு குறிப்பிட்ட  எண்ணிக்கைக்கு மேலாக புக்கிங்கை கேன்சல் செய்தால்  அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு புக்கிங் எதுவும் தர கூடாது என்றும்  வாடகை கார்களில் பயணிப்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில், இனி 10 சதவிகிதத்திற்குள் மட்டுமே ஓலா, உபர் நிறுவனங்களுக்குக் கிடைக்கும் என்றும் மீதமுள்ள 90% பணம் ஓட்டுநர்களுக்குக்  கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

குறிப்பாக ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை பயோமெட்ரிக்ஸ் அல்லது ஃபேசியல் ரெகக்னிசன் முறையில் ஓட்டுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், பயணிகளுக்கு 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு போன்ற விதிகளும் கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.  விரைவில் இந்த  விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.