×

இனி இரவிலும் பெண்கள் பணிபுரியலாம்…! அனுமதி அளித்தது அரசு!

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். பல துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு பணிபுரிந்து வந்தாலும், தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு சிரமங்களும், தடைகளும் இருந்து வந்தது. கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்கெனவே பெண்கள் நைட் ஷிப்ட்களில் பணிபுரிவதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். பல துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு பணிபுரிந்து வந்தாலும், தொழிற்சாலைகளில் இரவு
 

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். பல துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு பணிபுரிந்து வந்தாலும், தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு சிரமங்களும், தடைகளும் இருந்து வந்தது.  கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்கெனவே பெண்கள் நைட் ஷிப்ட்களில் பணிபுரிவதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். பல துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு பணிபுரிந்து வந்தாலும், தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண்கள் பணிபுரிவதற்கு சிரமங்களும், தடைகளும் இருந்து வந்தது.  கர்நாடக மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஏற்கெனவே பெண்கள் நைட் ஷிப்ட்களில் பணிபுரிவதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. தகவல் தொழில் நுட்ப துறையைத் தவிர, பிற நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் இரவு நேரங்களில் பெண்கள் பணியாற்ற இதுவரையில் கர்நாடக அரசு அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது.  

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள அனைத்துத் தொழிற்சாலைகளிலும், தனியார் நிறுவனங்களிலும் இனி இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரையிலான பணிநேரத்தில் பெண்களும் பணியாற்ற அனுமதி அளித்து கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு வகுத்துள்ள புதிய விதிமுறைகளைப் பின்பற்றி தனியார் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இனி பெண்களை இரவு நேரங்களில் பணிபுரிவதற்கு பணியமர்த்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் இப்படி இரவுகளில் பணிபுரிய வேண்டும் எனப் பெண் ஊழியர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், இரவு நேரத்தில் பணிபுரிய விருப்பமுள்ள பெண் ஊழியர்களிடம் எழுத்துப்பூர்வமாக நிறுவனங்கள் அனுமதி பெற்றுக் கொண்ட பின்னரே அவர்களை இரவு பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.