×

இனி ஆண்களின் திருமண வயது இதுதானாம்?!

ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் உள்ளது. ஆண்களுக்கான திருமண வயதை 18 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருப்பதாகத் தகவல்வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாகக் கூட்டம் ஒன்றும் நடந்ததாக தி பிரிண்ட் இணையதளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தை திருமண தடுப்புச்
 

ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் உள்ளது.

ஆண்களுக்கான திருமண வயதை 18 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருப்பதாகத் தகவல்வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாகக் கூட்டம் ஒன்றும் நடந்ததாக   தி பிரிண்ட் இணையதளம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்,  2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில்  ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் உள்ளது. மேலும் திருமண வயதுக்கு முன்பு ஆணோ- பெண்ணோ திருமணம் செய்து கொண்டால் உரிய வயது வந்ததும் அவர்கள் சேர்ந்து வாழலாம். 

ஆனால் இந்த சட்டத்தில்  திருத்தம் கொண்டுவரும் பொருட்டு ஆண்களுக்கான திருமண வயதை 18 ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் திருமண வயதை அடையாமல் செய்யப்படும் திருமணம் உடனடியாக செல்லாததாகி விடும் என்றும் குழந்தை திருமணத்தை செய்து வைப்பவர்கள் அல்லது ஆதரிப்பவர்களுக்கு 2ஆண்டு சிறை தண்டனை 7 ஆண்டாக உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல்  அபராத தொகையையும் ஒரு லட்சத்திலிருந்து 7 லட்சமாக அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.