×

இனசேர்க்கையில் இருந்த பாம்புகளின் மீது அமர்ந்த பெண் பரிதாப பலி: செல்போனால் நடந்த விபரீதம்!

கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். கோரக்பூர்: செல்போனில் பேசியபடி பாம்புகளை கவனிக்காமல் அதன் மீது அமர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ரியானவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். ஈர்த்து மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் வேலைபார்த்து வருகிறார். அதனால் கீதா கணவருடன் மணிக்கணக்கில் செல்போன் பேசி வந்துள்ளார். அதே போல் சம்பவத்தன்று கீதா செல்போனில் பேசியபடி படுக்கையறைக்குச் சென்றுள்ளார். ஆனால் மெத்தையில் இரண்டு
 

 கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

கோரக்பூர்: செல்போனில் பேசியபடி பாம்புகளை கவனிக்காமல் அதன் மீது அமர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ரியானவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். ஈர்த்து மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் வேலைபார்த்து வருகிறார். அதனால் கீதா கணவருடன்  மணிக்கணக்கில் செல்போன் பேசி வந்துள்ளார். அதே போல் சம்பவத்தன்று கீதா செல்போனில் பேசியபடி படுக்கையறைக்குச் சென்றுள்ளார்.  ஆனால்  மெத்தையில் இரண்டு  பாம்புகள் இருந்துள்ளதை அவர் கவனிக்காமல் மெத்தையில் அமர்ந்துள்ளார். அப்போது பாம்புகள் கீதாவை கொத்தியுள்ளது. 

இதையடுத்து மயக்கமடைந்த அவரை அங்கிருந்தவர்கள்  மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால்,  கீதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பாம்புகள் இரண்டும் மெத்தையிலேயே இருந்துள்ளது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், பாம்பை அடித்தே கொன்றுள்ளனர். 

இதுகுறித்து கூறியுள்ள கால்நடை மருத்துவர்கள், பாம்புகள் இனச் சேர்க்கையிலிருந்தபோது அந்தப்பெண் அதன்மீது அமர்ந்ததால் அவை அந்த பெண்ணை கடித்துள்ளதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.