×

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 34ஆக உயர்வு….. தமிழர் ஒருவருக்கும் பாதிப்பு….

நம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவார். சீனாவில் 3 ஆயிரத்தும் அதிகமானோரை கொன்று குவித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. உலக முழுவதுமாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. நம் நாட்டில் பெரிய அளவில் கொரோனா வைரஸ்
 

நம் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவார்.

சீனாவில் 3 ஆயிரத்தும் அதிகமானோரை கொன்று குவித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. உலக முழுவதுமாக கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி விட்டது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. நம் நாட்டில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்றாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் லடாக் சேர்ந்த 2 பேருக்கும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய (சனிக்கிழமை) நிலவரப்படி நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட லடாக்கை சேர்ந்த இருவர்களும் அண்மையில் ஈரான் சென்று வந்து இருந்தனர். தமிழகத்தை சேர்ந்தவர் அண்மையில் ஓமன் சென்று வந்து இருந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் உறுதியாக உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தகவல் தெரிவித்தது. கொரோனா வைரஸ் பரவுவதால் மக்கள் தற்போது மாஸ்க் அணிந்து வெளியே செல்ல தொடங்கியுள்ளனர்.