×

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவில் திறக்கப்படும் மதுக்கடைகள்!

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். அதன்பின் மே..3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மே.17 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயியுள்ளனர். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
 

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் குடிமகன்கள் தங்களை தயார் செய்துகொண்டனர். ஆனால், 24ம் தேதி இரவு பேசிய பிரதமர் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவித்தார். அதன்பின் மே..3 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மே.17 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் குடிமகன்கள் திக்குமுக்காடிப் போயியுள்ளனர். மது கிடைக்காததால் தற்கொலை, வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. மதுவுக்கு பதில் ரசாயனம் குடித்து உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 6 அடி சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்றும் ஒரே சமயத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதிக்கக்கூடாது என்றும் நிபந்தனையும்  வழங்கப்பட்டது.

இந்நிலையில் மே 4 ஆம் தேதி முதல் மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மதுக்கடைகள் விற்பனைக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்படுத்துதல் பகுதி தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது. 
சிவப்பு மண்டல பகுதிகளில் உள்ள மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் 12,296 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 521பேர் உயிரிழந்துள்ளனர்.