×

இந்திய ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட வீரர்களின் சடலங்களை வெள்ளை கொடி காட்டி எடுத்து சென்ற பாகிஸ்தான்…

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில் பலியான தங்களது வீரர்களின் சடலங்களை நேற்று பாகிஸ்தான் வெள்ளை கொடி காட்டி எடுத்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 10-11ம் தேதிகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹஜிபுர் செக்டாரில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய நிலைகளை
 

எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், இந்திய ராணுவத்தின் பதில் தாக்குதலில் பலியான தங்களது வீரர்களின் சடலங்களை நேற்று பாகிஸ்தான் வெள்ளை கொடி காட்டி எடுத்து சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அடிக்கடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 10-11ம் தேதிகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஹஜிபுர் செக்டாரில்  எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனையடுத்து இந்திய வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தை சேர்ந்த சிப்பாய் குலாம் ரசூல் கொல்லப்பட்டார். இறந்த குலாம் ரசூலின் உடலை மீட்க பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து தீவிர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இரண்டு நாட்களாக இறந்த ராணுவ வீரரின் உடலை மீட்க தீவிர தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

ஆனால் அப்படியும் அவர்களால் உடலை மீட்க முடியவில்லை. மேலும் இந்த தாக்குதலில் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த மற்றொரு பாகிஸ்தான் சிப்பாயும் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டார். இதனால் கடைசியில் வேறு வழியில்லாமல் நேற்று வெள்ளை கொடி காட்டி 2 வீரர்களின் உடலையும் எடுத்து சென்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தில் 70 சதவீதம் பேர் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள். அதனால் தாக்குதலில் பலியான அந்த மாகாண வீரர்களின் உடலை மீட்க முடிந்த அளவு பாகிஸ்தான் முயற்சி செய்யும். அதேசமயம் மற்ற மாகாண வீரர்கள் யாரும் பலியானால் சடலத்தை மீட்க அதிக முயற்சி எடுக்காது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.