×

இந்திய கடல் பகுதியில் உளவு பார்த்த சீன கப்பல்! விரட்டியடித்த இந்திய கடற்படை போர்க்கப்பல்

இந்திய கடல் பகுதியில் உளவு பார்த்த சீன உளவு கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கடல் பகுதியில் போர்ட் பிளையரில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு அருகே நேற்று சீனாவின் ஆய்வு கப்பலான ஷி யான் 1 உளவு பார்ப்பதை இந்திய கடற்படையின் கடல் கண்காணிப்பு விமானம் கண்டு பிடித்தது. இந்த தகவல் உடனடியாக இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்திய சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை சீன
 

இந்திய கடல் பகுதியில் உளவு பார்த்த சீன உளவு கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடல் பகுதியில் போர்ட் பிளையரில் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு அருகே நேற்று சீனாவின் ஆய்வு கப்பலான ஷி யான் 1 உளவு பார்ப்பதை இந்திய கடற்படையின் கடல் கண்காணிப்பு விமானம் கண்டு பிடித்தது. இந்த தகவல் உடனடியாக இந்திய கடற்படைக்கு தெரிவிக்கப்பட்டது. 

இந்திய சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளை சீன உளவு கப்பல் நோட்டமிடும் தகவல் கிடைத்தவுடன் இந்திய கடற்படை அங்கு தனது போர்க்கப்பலை அனுப்பியது. ஒரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் வெளிநாடுகள் ஆய்வு பணியில் ஈடுபடுவது சட்டப்படி தவறாகும். ஆகையால் இந்திய கடற்படை தனது போர்க்கப்பலை சீன கப்பலை எச்சரிக்க அங்கு அனுப்பியது. மேலும், இந்திய கடல் எல்லையை விட்டு வெளியேறுமாறு சீன கப்பலுக்கு சிக்னல் கொடுத்தது. 

இதனையடுத்து அந்த சீன கப்பல் தனது நாட்டை நோக்கி திரும்பி சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியில் நம் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதற்காக சீனா அந்த கப்பலை அனுப்பியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.