×

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங் நியமனம்!

இந்தியக் கடற்படையின் முதல் ஹெலிகாப்டர் விமானியான இவர், இந்திய கடற்படையின் தளபதியாக உயர்ந்துள்ளார் புதுதில்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங்கை நியமனம் செய்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கடற்படையின் தற்போதைய தளபதி சுனில் லம்பாவின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கடற்படையின் புதிய தளபதியாக துணை தளபதி கரம்பீர் சிங்கை நியமனம் செய்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய கடற்படையில்
 

இந்தியக் கடற்படையின் முதல் ஹெலிகாப்டர் விமானியான இவர், இந்திய கடற்படையின் தளபதியாக உயர்ந்துள்ளார்

புதுதில்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பீர் சிங்கை நியமனம் செய்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய கடற்படையின் தற்போதைய தளபதி சுனில் லம்பாவின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, கடற்படையின் புதிய தளபதியாக துணை தளபதி கரம்பீர் சிங்கை நியமனம் செய்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய கடற்படையில் சுமார் 39 நாடுகளாக பணியாற்றி வரும் கரம்பீர் சிங், பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். பரம் விஷிஸ்ட் சேவா மற்றும் அட்டி விஷிஸ்ட் சேவா பதக்கங்களை பெற்றவர். கடந்த 1959-ஆம் ஆண்டு பிறந்த இவர், 1980-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய கடற்படையில் நிர்வாக கிளையில் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்தியக் கடற்படையின் முதல் ஹெலிகாப்டர் விமானியான இவர், இந்திய கடற்படையின் தளபதியாக உயர்ந்துள்ளார் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதையும் வாசிங்க

பாஜக வேட்பாளராக நிஷா களமிறங்குகிறார்?!