×

இந்த PUBG இன்னும் எத்தனை குடும்பத்தை காவு வாங்கப் போகுதோ

குஜராத் மாநில அரசாங்கம் அம்மாநில பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கணும்கிற நோக்கத்துக்காக அபயம் அப்படின்னு ஒரு ஹெல்ப் லைன் நடத்துகிறார்கள். குஜராத் மாநில அரசாங்கம் அம்மாநில பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கணும்கிற நோக்கத்துக்காக அபயம் அப்படின்னு ஒரு ஹெல்ப் லைன் நடத்துகிறார்கள். ஆபத்தில் இருக்கும் அல்லது உதவி தேவைப்படும் குஜராத் பெண்கள் 181 என்ற எண்ணுக்கு போன் பண்ணினா, உடனடியா அவர்களுக்கான தகுந்த உதவியும் ஆலோசனையும் வழங்கப்படும். எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கா?? இப்போ இந்த 181
 

குஜராத் மாநில அரசாங்கம் அம்மாநில பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கணும்கிற நோக்கத்துக்காக அபயம் அப்படின்னு ஒரு ஹெல்ப் லைன் நடத்துகிறார்கள்.

குஜராத் மாநில அரசாங்கம் அம்மாநில பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கணும்கிற நோக்கத்துக்காக அபயம் அப்படின்னு ஒரு ஹெல்ப் லைன் நடத்துகிறார்கள். ஆபத்தில் இருக்கும் அல்லது உதவி தேவைப்படும் குஜராத் பெண்கள் 181 என்ற எண்ணுக்கு போன் பண்ணினா, உடனடியா அவர்களுக்கான தகுந்த உதவியும் ஆலோசனையும் வழங்கப்படும்.

எல்லாம் நல்லபடியா போயிட்டு இருக்கா?? இப்போ இந்த 181 நம்பருக்கு ஒரு அழைப்பு வருது, பேசுறது 19 வயசு பொண்ணு – ஒரு குழந்தைக்கு தாய். அபயம் மையத்தில் இருக்கிற ஆலோசகரிடம் இந்த பொண்ணு உதவி கேட்குது. என்னான்னு?? இந்த மாதிரி என் கணவர்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கணும் அதற்கான ஆலோசனை சொல்லுங்கன்னு கேட்குது. உடனே அந்த ஆலோசகர் பதறிப்போய், ஏம்மா உன் கணவர் உன்னை கொடுமை படுத்தறாரான்னு கேட்க, அதுக்கு அந்தப் பொண்ணு சொல்லுது, அதெல்லாம் இல்ல, என் வீட்டுக்காரர் வேலைக்கு போயிடுறார், PUBG விளையாட்டை ஆன்லைன்ல ஆடும்போது ஒரு பையன் பழக்கமாகி இருக்கான், வேலைக்கு போகிற என் புருஷனை டைவர்ஸ் பண்ணிட்டு இந்த பையனை கல்யாணம் கட்டிக்கிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து PUBG ஆடாலாம்ல என்று சிரிக்காமல் சொல்லி இருக்கு. இதை கேட்ட அபயம் ஆலோசகர் என்ன ஆனார்னு தெரியல.