×

இதோ! “வாட்ஸ்அப் வாயன்கள் ஆரம்பிச்சிட்டாங்க…கொரோனா வைரஸ் அறிவுரைகளாம்” – போலி மருத்துவ வழிமுறைகள்

கொரோனா வைரஸை தடுப்பது எப்படி என்பது பற்றி வாட்ஸ்அப்பில் போலியான மருத்துவ வழிமுறைகள் வலம் வருகின்றன. சென்னை: கொரோனா வைரஸை தடுப்பது எப்படி என்பது பற்றி வாட்ஸ்அப்பில் போலியான மருத்துவ வழிமுறைகள் வலம் வருகின்றன. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கர்நாடகா மற்றும் டெல்லியில் என இருவர் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட 64 வயதான ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதன்
 

கொரோனா வைரஸை தடுப்பது எப்படி என்பது பற்றி வாட்ஸ்அப்பில் போலியான மருத்துவ வழிமுறைகள் வலம் வருகின்றன.

சென்னை: கொரோனா வைரஸை தடுப்பது எப்படி என்பது பற்றி வாட்ஸ்அப்பில் போலியான மருத்துவ வழிமுறைகள் வலம் வருகின்றன.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கர்நாடகா மற்றும் டெல்லியில் என இருவர் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட 64 வயதான ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதன் மூலம் இந்தயாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 129 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமாகி வீட்டுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கொரோனா வைரஸை தடுப்பது எப்படி என்பது பற்றி வாட்ஸ்அப்பில் போலியான மருத்துவ வழிமுறைகள் வலம் வருகின்றன. அவற்றுக்கு முறையான எந்தவொரு அடிப்படை ஆதாராமும் கொடுக்கப்படவில்லை. எனவே மக்கள் இதுபோன்ற வாட்ஸ்அப் வதந்திகளை நம்பாமல் கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை நாடுவது நல்லது. வாட்ஸ்அப்பில் வலம் வரும் 2 வதந்திகள் எடுத்துக்காட்டுக்காக இதோ கீழே கொடுத்துள்ளோம்.

வாட்ஸ்அப் வதந்தி 1:

உலகமே பயப்படும் கொரானாவை எதிர்கொள்ளும் வழிகள்….கொராணா வைரஸின் ஆயுட்காலம் 12 மணி நேரம் மட்டுமே. கொராணா காய்ச்சல் உங்களுக்கு இருக்கிறதா..? எப்படி தெரிந்து கொள்வது.. ரொம்ப சிம்பிள். நீள பெருமூச்சை இழுத்து 10 லிருந்து 12 நொடிகள் வரை நிறுத்தி விடவும்.. அப்போது தொண்டையில் வலியோ, தொடர் இருமலோ வந்தால் உங்களுக்கு கொராணாவின் தாக்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். முறையாக சோதித்து பார்ப்பது நல்லது.

கொராணா வந்து விட்டால் பயப்பட வேண்டாம். சூடான தண்ணீரை அதிகமில்லை இரண்டு மடக்கு இருபது நிமிடத்துக்கொருமுறை குடியுங்கள். கொராணா வைரஸ் தொண்டையில் மட்டுமே வாழும்..வயிற்றுக்குள் சென்றால் மரித்துப் போய்விடும். ஹோட்டல்கள் மற்றும் வெளியிட சாப்பாடு வேண்டாம். ஹோட்டல்களின் மெனு கார்டுகளில் கூட இந்த வைரஸ் இருக்கலாம். 27 டிகிரி செல்ஷியஸ் க்கு மேல் இந்த வைரஸ் தாங்காது எனவே இந்தியா மாதிரி வெப்ப மண்டல நாடுகளில் இது தாக்கு பிடிப்பது அரிதிலும் அரிது.

வாட்ஸ்அப் வதந்தி 1:

முக்கிய தகவல்:

கொரோனா வைரஸ் இது நுரையீரலை அடைவதற்கு முன்பு நான்கு நாட்கள் தொண்டையில் இருக்கும். இந்த நேரத்தில் அந்த நபருக்கு இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்படத் தொடங்குகிறது. அவர் பூண்டு,உப்பு  அல்லது வினிகருடன் கலந்த வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் வைரஸை நீக்குவதற்கு உதவுகிறது. இந்த தகவலை விரைவாக பரப்புங்கள், ஏனெனில் அது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவும்.