×

இது எங்க ஏரியா! நீதிமன்ற வளாகத்தில் அராஜகம் செய்த போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்த வழக்கறிஞர்கள்!!

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பான பிரச்னையில் காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வழக்காட வரும் வழக்கறிஞர்கள் தங்கள் வாகனத்தை ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளனர். அங்கு காவல்துறையினரும் வாகனங்களை நிறுத்த தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதல் முற்றியதால் வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்தனர். உடனடியாக அங்கு கூடிய மேலும் சில வழக்கறிஞர்கள்
 

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பார்க்கிங் பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பான பிரச்னையில் காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. 

திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவதற்கு இடப்பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு வழக்காட வரும் வழக்கறிஞர்கள் தங்கள் வாகனத்தை ஒதுக்கப்பட்ட பார்க்கிங் பகுதியில் நிறுத்தியுள்ளனர். அங்கு காவல்துறையினரும் வாகனங்களை நிறுத்த தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதல் முற்றியதால் வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்தனர். உடனடியாக அங்கு கூடிய மேலும் சில வழக்கறிஞர்கள் காவல்துறை அதிகாரிகளை ஓட ஓட விரட்டி அடித்தனர்.

மேலும் அங்கிருந்த காவல்துறையினரின் வாகனங்களுக்கு தீவைத்ததால் நீதிமன்ற வளாகம் போர்களமானது. இதில் துணை காவல் ஆணையர் உட்பட 20 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த மோதலில் சில வழக்கறிஞர்களும் காயமடைந்தனர்.  காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து  நாளை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக டெல்லி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.