×

‘இதன் மூலமாகக் கூட கொரோனா வைரஸ் பரவலாம்’.. கேரள அரசின் அதிரடி நடவடிக்கை!

120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 83 ஆக உயர்ந்துள்ள நிலையில், 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,438 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 72 ஆயிரம் பேர் அந்த வைரஸ்
 

120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

120 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 83 ஆக உயர்ந்துள்ள நிலையில், 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,438 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 72 ஆயிரம் பேர் அந்த வைரஸ் தாக்குதலிலிருந்து மீண்டு வந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பரவி வரும் மாநிலங்களில் முதல் இடத்தில் இருப்பது கேரளா தான்.கேரளாவில் மட்டுமே 22க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரள அரசு தியேட்டர்கள், மால்கள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அதிலிருந்து குணமானவர்களை ஊடகங்கள் பேட்டியெடுத்து ஒளிபரப்பி வருகின்றன. அப்படிச் செய்வதால் அவர்கள் பேசும் மைக் மூலமாகக் கூட பரவ வாய்ப்பு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களைப் பேட்டி எடுக்கக் கூடாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.