×

இணைய பயன்பாடு மாணவர்களின் அடிப்படை சுதந்திரம்! எப்போது எப்படி படிக்க வேண்டும் என அவர்களுக்கு தெரியும் – நீதிமன்றம் அதிரடி

மாணவர்கள் படிப்பதற்காக பயன்படும் கருவி இணையம் என்பதை அடிப்படை சுதந்திர சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் படிப்பதற்காக பயன்படும் கருவி இணையம் என்பதை அடிப்படை சுதந்திர சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியும், அவரது தோழிகளும் விடுதியில் கொண்டுவரப்பட்ட மொபைல் பயன்பாட்டு கட்டுப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். விடுதியில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
 

மாணவர்கள் படிப்பதற்காக பயன்படும் கருவி இணையம் என்பதை அடிப்படை சுதந்திர சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் படிப்பதற்காக பயன்படும் கருவி இணையம் என்பதை அடிப்படை சுதந்திர சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் ஸ்ரீ நாராயணகுரு கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவியும், அவரது தோழிகளும் விடுதியில் கொண்டுவரப்பட்ட மொபைல் பயன்பாட்டு கட்டுப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். விடுதியில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மொபைல் போனை பயன்படுத்த தடை விதித்ததாகவும், இதனால் தாங்கள் படிப்பிற்கு இணையதளத்தைப் பயன்படுத்த முடியவில்லை என்றும் குற்றஞ்சாட்டினர். இதனையடுத்து அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நிர்வாகம் நீக்கம் செய்தது. 

இதை எதிர்த்து மாணவி தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இணைய வசதி பெறுதல் என்பது அடிப்படை கல்வி உரிமைக்கும் அரசியலைப்புச் சட்டப் பிரிவு 21 இன் படி அடிப்படை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டியது. மேலும் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட மாணவியை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. ஆஷா, கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். 

மாணவர்கள் படிப்பதற்காக பயன்படும் கருவி இணையம் என்பதை அடிப்படை சுதந்திர சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். கல்லூரி விடுதிகளில் பயிலும் மாணவர்கள் வயது வந்தோர் என்றும், எப்போது எப்படி படிக்க வேண்டும் என முடிவெடுக்க அவர்களால் முடியும் என்பதை பெற்றோரும், கல்லூரிகளும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்