×

இ ரிக்‌ஷா டிரைவரின் சமூக விலகல் கண்டுபிடிப்பு……. பாராட்டி தள்ளிய ஆனந்த் மகிந்திரா

இ ரிக்ஷா டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிகளுக்கு இடையே சமூக விலகலை உறுதி செய்ய கண்டுபிடித்த புதுமையான ஐடியாவை மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மகிந்திரா டிவிட்டரில் பாராட்டியுள்ளார். மகிந்திரா குழுமத்தின் வர்த்தக சாம்ராஜ்யத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா. டிவிட்டரில் மிகவும் பிரபலமான மனிதர்களில் ஆனந்த் மகிந்திராவும் ஒருவர். தான் சந்தித்த அனுபவங்கள், தன்னை வியப்பில் ஆழ்த்தியவர்கள் மற்றும் மற்றவர்களின் வித்தியாசமான முயற்சிகளும் குறித்தும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வார். மேலும் ஒருவர் ஏதாவது பயனுள்ள கருத்தை
 

இ ரிக்‌ஷா டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிகளுக்கு இடையே சமூக விலகலை உறுதி செய்ய கண்டுபிடித்த புதுமையான ஐடியாவை மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த மகிந்திரா டிவிட்டரில் பாராட்டியுள்ளார்.

மகிந்திரா குழுமத்தின் வர்த்தக சாம்ராஜ்யத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா. டிவிட்டரில் மிகவும் பிரபலமான மனிதர்களில் ஆனந்த் மகிந்திராவும் ஒருவர். தான் சந்தித்த அனுபவங்கள், தன்னை வியப்பில் ஆழ்த்தியவர்கள் மற்றும் மற்றவர்களின் வித்தியாசமான முயற்சிகளும் குறித்தும் டிவிட்டரில் பகிர்ந்து கொள்வார். மேலும் ஒருவர் ஏதாவது பயனுள்ள கருத்தை சொன்னாலும் அதனை ஏற்றுகொள்வார். டிவிட்டரில் ஆனந்த் மகிந்திராவை ஒருவர் பின்தொடர்ந்தாலே போதும் பல்வேறு புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஆனந்த மகிந்திரா தற்போது இ ரிக்‌ஷா டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் பயணிகளுக்கு இடையே சமூக விலகலை உறுதி செய்ய கண்டுபிடித்த புதுமையான ஐடியாவை தனது டிவிட்டரில் பகிர்ந்து உள்ளார். மேலும், அந்த ரிக்‌ஷா அமைப்பின் வீடியோவை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.  வீடியோவில் இ ரிக்‌ஷா டிரைவர் தனது வாகனத்தில் பயணிகள் அமரும் பகுதியை தடுப்பு அமைத்து நான்கு பகுதிகளாக பிரித்துள்ளார். இதனால் அந்த வாகனத்தில் 4 பயணிகள் எந்தவித நேரடி தொடர்பு இன்றி பயணிக்கலாம். 

ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டரில் அந்த வீடியோவை பதிவேற்றம் செய்து, விரைவாக புதுமைப்படுத்துவதற்கும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுவதற்கும் நம் மக்களின் திறன்கள் என்னை ஆச்சரியப்படுத்துவதை ஒரு போதும் நிறுத்தாது. @ராஜேஷ்664 நமது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு குழுக்களின் ஆலோசகராக அவரை (இ ரிக்‌ஷா டிரைவர்) பெற வேண்டும் என பாராட்டி பதிவு செய்து இருந்தார். ராஜேஷ் என்பவர் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வாகன மற்றும் பார்ம் துறைகளின் செயல் இயக்குனர். ஆனந்த் மகிந்திராவின் இந்த டிவிட்டை 22 ஆயிரம் லைக் செய்துள்ளனர். 4 ஆயிரம் ரீடிவிட் செய்துள்ளனர்.