×

ஆற்றைக் கடக்க கயிறு மேல் நடக்கும் தேசத்தில் நிலவில் நடக்க சந்திராயன் 2?

கால்வைத்து நடக்க ஒரு கயிறும், கைப்பிடித்துக்கொள்ள ஆறடி உயரத்தில் மற்றொரு கயிறுமாக இரண்டு கயிறை கட்டிவிட்டுள்ளனர். தெருவோர கூத்துக்கலைஞர்கள் சாகசம் செய்வதைப்போல, கிராமத்தினர் கால்வாயைக் கடக்க வேண்டியிருக்கிறது. மத்திய பிரதேசம், தேவாஸ் பகுதியில் ஆறிலும் சேராமல் ஓடையிலும் சேராமல் கால்வாய் ஒன்று ஓடுகிறது. இரு கிராமங்களுக்கு இடையில் இருக்கும் இந்த கால்வாயைக் கடக்க பாலங்கள் ஏதுமில்லை. கால்வாயில் நீர் நிறைந்து ஓடும்போது இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல வழி ஏதும் இல்லை. எனவே, ஊர்க்காரர்கள் சேர்ந்து கால்வாயைக் கடக்க,
 

கால்வைத்து நடக்க ஒரு கயிறும், கைப்பிடித்துக்கொள்ள ஆறடி உயரத்தில் மற்றொரு கயிறுமாக இரண்டு கயிறை கட்டிவிட்டுள்ளனர். தெருவோர கூத்துக்கலைஞர்கள் சாகசம் செய்வதைப்போல, கிராமத்தினர் கால்வாயைக் கடக்க வேண்டியிருக்கிறது.

மத்திய பிரதேசம், தேவாஸ் பகுதியில் ஆறிலும் சேராமல் ஓடையிலும் சேராமல் கால்வாய் ஒன்று ஓடுகிறது. இரு கிராமங்களுக்கு இடையில் இருக்கும் இந்த கால்வாயைக் கடக்க பாலங்கள் ஏதுமில்லை. கால்வாயில் நீர் நிறைந்து ஓடும்போது இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல வழி ஏதும் இல்லை. எனவே, ஊர்க்காரர்கள் சேர்ந்து கால்வாயைக் கடக்க, கால்வாயின் இரு கரைகளையும் இணைக்கும்வகையில் இரண்டு கயிறு கட்டிவிட்டு இருக்கின்றன‌ர்.

கால்வைத்து நடக்க ஒரு கயிறும், கைப்பிடித்துக்கொள்ள ஆறடி உயரத்தில் மற்றொரு கயிறுமாக இரண்டு கயிறை கட்டிவிட்டுள்ளனர். தெருவோர கூத்துக்கலைஞர்கள் சாகசம் செய்வதைப்போல, கிராமத்தினர் கால்வாயைக் கடக்க வேண்டியிருக்கிறது. கால்கள் வைப்பதற்குத் தேவையான அகலம்கூட இல்லாததால், குழந்தைகளால் கயிறை கடக்க முடியாது. பெரியவர்கள் முதுகில் ஏறிக்கொண்டால்தான் குழந்தைகள் சிறுவர்கள் கால்வாயை கடக்க முடியும். நிலவுக்கு சந்திராயனை அனுப்புங்க ஆப்பீசர், வேண்டாம்னு சொல்லலை. கூடவே, அடிப்படை தேவைகள் குறித்தும் கொஞ்சூண்டு கவனம் செலுத்துங்கன்னுதான் கேக்குறோம்!