×

ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்.. “உங்கள் அன்புக்கு ஈடு, இணையே இல்லை” என நெகிழ்ந்த மெலனியா!

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மெலனியா டிரம்ப், டெல்லியில் உள்ள மோதிபாக் அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியாவிற்கு வந்தார். அவருடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோரும் வருகை தந்தனர். முதன் முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் டிரம்ப்பை வரவேற்க ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவரின் வருகையை இந்தியாவே எதிர்நோக்கிக் காத்துக்
 

பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மெலனியா டிரம்ப், டெல்லியில் உள்ள மோதிபாக் அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இந்தியாவிற்கு வந்தார். அவருடன் அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா மற்றும் மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோரும் வருகை தந்தனர்.

முதன் முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் டிரம்ப்பை வரவேற்க ஏராளமான கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவரின் வருகையை இந்தியாவே எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த நிலையில் பிரதமர் மோடி டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார். 

அதன் பின்னர் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் தாஜ்மகால், சபர்மதி இல்லம் உள்ளிட்ட பல இடங்களைப் பார்வையிட்டனர். சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து இன்று பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மெலனியா டிரம்ப், டெல்லியில் உள்ள மோதிபாக் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் உரையாற்றுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, மெலனியா டிரம்ப் இன்று அந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

பள்ளிக்கு சென்ற மெலனியாவை அந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள் பாரம்பரிய உடையணிந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனைப் பார்த்த மெலனியா மிகவும் நெகிழ்ச்சி அடைந்தார். அதனையடுத்து மாணவர்களுடன் உரையாடிய பின்னர் பேசிய அவர், “தன்னை இந்திய மக்கள் பெரிதும் விரும்புவதாகவும் இந்தியாவிற்கு  வருவது முதல்முறையாக இருப்பினும் மக்கள் மிகுந்த பாசத்தை வெளிப்படுத்துகின்றனர் என்றும் உங்களின் அன்புக்கு ஈடு, இணையே இல்லை”  என்றும் உணர்ச்சி ததும்ப கூறினார்.