×

ஆபத்தில் இருந்த தமிழ் பெண்களை புத்திசாலிதனமாக காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்: நெகிழ வைக்கும் சம்பவம்!?

ஆபத்தில் இருந்த பெண்களை சைரன் ஒலியை எழுப்பி கேரளாவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர்: ஆபத்தில் இருந்த பெண்களை சைரன் ஒலியை எழுப்பி கேரளாவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருச்சூரில் நள்ளிரவு படம் பார்த்து விட்டு பெண்கள் இருவர் எம்ஜி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த பெண்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியே
 

ஆபத்தில் இருந்த பெண்களை  சைரன் ஒலியை எழுப்பி  கேரளாவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூர்:  ஆபத்தில் இருந்த பெண்களை  சைரன் ஒலியை எழுப்பி  கேரளாவைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருச்சூரில் நள்ளிரவு படம் பார்த்து விட்டு பெண்கள் இருவர் எம்ஜி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த பெண்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியே ஆம்புலன்ஸ் டிரைவர் ஜானிக்குட்டி, அவரது உதவியாளர்  ஷித்தினும் வந்துள்ளனர்.

பெண்களை அந்த நபர் தாக்குவதைக் கண்ட அவர்கள் அதிக தடுப்பதற்காக ஓடியுள்ளனர். தாக்குதலை  தடுக்கும் முயற்சியில் ஷித்தினை அந்த மர்ம நபர் கல் கொண்டு பலமாக தாக்கியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த டிரைவர் ஜானிக்குட்டி திடீரென்று  ஆம்புலன்ஸின் சைரனைச் சென்று அலறவிட்டுள்ளார்.

இதனை சத்தம் கேட்டு அப்பகுதியை இருந்த சிலர் பேர் சம்பவ இடத்திற்கு வந்து  உதவியுள்ளனர். அவர்கள் உதவியுடன் ஜானிக்குட்டி அந்த மர்ம நபரை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களையும், தாக்கப்பட்ட  உதவியாளர் ஷித்தினும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபர் சைக்கோவா, அல்லது வேறேதும் காரணங்களுக்காக தாக்குதல் நடத்தினாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்களை காப்பாற்ற சமயோஜிதமாக யோசித்து அதிரடி முடிவெடுத்த  ஆம்புலன்ஸ் டிரைவர் ஜானிக்குட்டி மற்றும் அவரது உதவியாளர்  ஷித்தினுக்கும் பாராட்டுக்கள்  குவிந்து வருகின்றன.