×

ஆன்லைன் கல்வி: 94% மாணவர்களிடம் இன்டர்நெட் வசதி இல்லை- ஆய்வில் தகவல்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரிகளை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டிற்கு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில்
 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரிகளை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டிற்கு செல்வதாக அறிவிப்பு வெளியானது.

இருப்பினும் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பதால் மாணவர்களுக்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்’ என்ற நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. கிராமங்களில் 44%, நகரங்களில் 65% மாணவர்களிடம் மட்டுமே இணையதள வசதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 5,987 மாணவர் கடந்த மே, ஜூன் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. 11 முதல் 18 வயது மாணவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 94% மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 1,740 பேரில் வெறும் 3% மாணவர்களுக்கு மட்டுமே ஸ்மார்ட்போன்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 95% குடும்பங்களின் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் கீழ் உள்ளது. அவர்களுக்கு ஸ்மார்ட்போன் என்பது ஒரு ஆடம்பர பொருளாகவே உள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.