×

‘ஆதார் அட்டையில் சாதி பெயர் இல்லை’ : கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!

மணமகளின் ஆதார் அட்டையில் சாதி பெயர் இல்லை என்ற காரணத்தால் மணமகன் வீட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குண்டூர் : மணமகளின் ஆதார் அட்டையில் சாதி பெயர் இல்லை என்ற காரணத்தால் மணமகன் வீட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பெடகாகனியில் உள்ள கோவில் திருமண ஏற்பாடு ஒன்று நடந்து வந்துள்ளது. முன்னதாக திருமணத்தைப் பதிவு செய்ய மணமகளின் ஆதார் அட்டையை மணமகன்
 

மணமகளின் ஆதார் அட்டையில் சாதி பெயர் இல்லை என்ற காரணத்தால் மணமகன் வீட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

குண்டூர் : மணமகளின் ஆதார் அட்டையில் சாதி பெயர் இல்லை என்ற காரணத்தால் மணமகன் வீட்டார் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள பெடகாகனியில் உள்ள கோவில்  திருமண ஏற்பாடு ஒன்று நடந்து வந்துள்ளது. முன்னதாக திருமணத்தைப் பதிவு செய்ய மணமகளின் ஆதார் அட்டையை மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். அதன்படி ஆதார் அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அதில்  மணமகளின் தந்தை பெயருக்குப்பின்னால் அவரது சாதி பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் சாதியை ஏமாற்றி திருமணம் செய்வதாகச் சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார்  இது குறித்து தகராறு செய்துள்ளனர்.அப்போது பெயருக்குப் பின்னால் சாதியை குறிப்பிடும் வழக்கம் தங்களுக்கு இல்லை என்று மணமகள் வீட்டார் தரப்பில் தெரிவித்தும் அவர்கள் இதை ஏற்க மறுத்து கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். 

இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்த மணமகள் வீட்டார் எந்த காரணமுமின்றி திருமணத்தை நிறுத்து விட்டதாகக் கூறி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.