×

ஆண் பிள்ளை இல்லையென்று 5 மகள்களைக் கொன்று, தாய் தற்கொலை | பதற வைக்கும் நிஜம் 

பெண் பிள்ளைகளை விடப் பெரிய செல்வம் உலகில் இல்லை என்பதை இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் சில பத்தாம் பசலித் தாய்மார்களும், கல் நெஞ்சம் படைத்த கணவன்களும் உணர்ந்துக் கொள்வதில்லை. இப்படியான ஒரு துயர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தின் பாவாடி காலா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரானாராம். இவருடைய மனைவி வேணு தேவி. இவர்களுக்கு அழகழகான தேவதைகளாக சந்தோஷி, மம்தா, மேனா, ஹன்சா, ஹேமலதா என்று புத்திசாலித்தனத்துடன் 5 மகள்கள். தங்களது பெயரைச்
 

பெண் பிள்ளைகளை விடப் பெரிய செல்வம் உலகில் இல்லை என்பதை இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் சில பத்தாம் பசலித் தாய்மார்களும், கல் நெஞ்சம் படைத்த கணவன்களும் உணர்ந்துக் கொள்வதில்லை. இப்படியான ஒரு துயர சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தின் பாவாடி காலா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. 

அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ரானாராம். இவருடைய மனைவி வேணு தேவி. இவர்களுக்கு அழகழகான தேவதைகளாக சந்தோஷி, மம்தா, மேனா, ஹன்சா, ஹேமலதா என்று புத்திசாலித்தனத்துடன் 5 மகள்கள். 
தங்களது பெயரைச் சொல்வதற்கு ஆண் பிள்ளை இல்லை என்கிற வருத்தத்தில் தம்பதியர்கள் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் தாய் வேணு தேவி நீண்ட நாட்களாக கவலையில் இருந்துள்ளார். 

சம்பவத்தன்று, தனது கணவர் பணிக்கு சென்ற நேரம் பார்த்து விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.  தனது 5 மகள்களையும் கொஞ்சமும் இரக்கமின்றி பெற்ற தாயே கிணற்றில் தள்ளிக் கொன்றுள்ளார். பின்னர் தானும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.  தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று 6 உடல்களையும் மீட்டனர். 

அவரது மகள்களில், நான்கு மகள் மிகவும் சுட்டி எனவும், படிப்பிலும் இவர்கள் ரொம்பவும் புத்திசாலிகளாகத் திகழ்ந்து வந்தார்கள் என்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் தெரிவித்தனர். தற்கொலைக்கு இது மட்டும் தான் காரணமா? வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்கிற ரீதியில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.