×

ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறும் தலைநகர்! கைக்கூப்பி கெஞ்சும் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்குமாறு மத்திய அரசை கைக்கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு 6-12 மணி நேரத்துக்கு சிகிச்சை அளிக்க மட்டுமே ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளன. இதனால் கொரோனா நோயாளிகள் படிப்படியாக இறக்கும் சூழலுக்கு தள்ளப்படுவர். இதனால் டெல்லிக்கு அவசரமாக ஆக்ஸிஜனை வழங்குமாறு மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் கொரோனா பரவலின் வேகம்
 

டெல்லிக்கு உடனடியாக ஆக்சிஜன் வழங்குமாறு மத்திய அரசை கைக்கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு 6-12 மணி நேரத்துக்கு சிகிச்சை அளிக்க மட்டுமே ஆக்ஸிஜன் கையிருப்பில் உள்ளன. இதனால் கொரோனா நோயாளிகள் படிப்படியாக இறக்கும் சூழலுக்கு தள்ளப்படுவர். இதனால் டெல்லிக்கு அவசரமாக ஆக்ஸிஜனை வழங்குமாறு மத்திய அரசுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துவருவதையடுத்து அங்கு ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டிசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை நிலவுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரமே தெரிவித்திருந்தார்.