×

அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும்! அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நடந்த மோடியின் அமைச்சரவை கூட்டம் இன்று காலை அவரது இல்லத்தில் கூடியது. கொரோனா கோவிட் 19 பரவுதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வழக்கமாக நீள் வட்ட மேசையில் அமைந்து அமைச்சரவை கூட்டம் நடக்கும். இன்று நடந்த அமைச்சரவை கூட்டம் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், “ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும்.
 

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நடந்த மோடியின் அமைச்சரவை கூட்டம் இன்று காலை அவரது இல்லத்தில் கூடியது. கொரோனா கோவிட் 19 பரவுதல் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வழக்கமாக நீள் வட்ட மேசையில் அமைந்து அமைச்சரவை கூட்டம் நடக்கும். இன்று நடந்த அமைச்சரவை கூட்டம் இடைவெளிவிட்டு அமர்ந்திருந்த படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், “ரேஷன் கடைகளில், பயனாளிகளுக்கு அரிசி கிலோ ரூ.3-க்கும், கோதுமை ரூ.2-க்கும் வழங்கப்படும். மாவட்டம் தோறும், விரைவில் கொரோனா தொடர்பான உதவி எண்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 80 கோடி பேருக்கு இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தடை உத்தரவை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.