×

அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வரும் தனியார் மருத்துவமனைகள்- ஜெகன்மோகன் ரெட்டி 

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு கட்டுப்பாட்டில் பார்கள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், பாலியல் வன்கொடுமைக்கு 3
 

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,  அரசு கட்டுப்பாட்டில் பார்கள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், பாலியல் வன்கொடுமைக்கு 3 வாரத்தில் தூக்கு என பல அதிரடி திட்டங்களை அமல்படுத்தி மக்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறார்.

இதற்கிடையில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. தற்போது வரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,251 ஆக உள்ளது. 32 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வெளியில் நடமாடுவது குறைந்தபாடில்லை. இது வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கச் செய்யும் என அஞ்சப்படுகிறது. இதைத் தடுக்க கடுமையான நடவடிக்கையை அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. ஆந்திராவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. 

இந்நிலையில்  ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கார்பரேட் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற அனைத்தும் அரசின் கீழ் கொண்டுவரப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.  எனவே அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதுடன்,  தனிமைப்படுத்தப்பட்ட அறைகள், படுக்கைகள், வென்டிலேட்டர்கள், சோதனை ஆய்வகங்கள் போன்ற மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.