×

அரசு பேருந்தில் பச்சை பசேலென செடிகள் வளர்க்கும் ஓட்டுநர்; காரணம் இதுதானாம்?!…

சமீபத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பிஜய் பால் எனும் ஆட்டோ டிரவைவர் தனது ஆட்டோ மீது செடி வளர்த்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல் பெங்களூரு அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பேருந்தில் செடி வளர்த்து வருகிறார். புவி வெப்பமயமாதல் பிரச்னை அதிகரித்து வரும் வேளையில், மரம் வளர்ப்பதன் அவசியத்தை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம். சமீபத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பிஜய் பால் எனும் ஆட்டோ டிரவைவர் தனது ஆட்டோ மீது செடி
 

சமீபத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பிஜய் பால் எனும் ஆட்டோ டிரவைவர் தனது ஆட்டோ மீது செடி வளர்த்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல் பெங்களூரு அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பேருந்தில் செடி வளர்த்து வருகிறார்.

புவி வெப்பமயமாதல் பிரச்னை அதிகரித்து வரும் வேளையில், மரம் வளர்ப்பதன் அவசியத்தை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம். சமீபத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பிஜய் பால் எனும் ஆட்டோ டிரவைவர் தனது ஆட்டோ மீது செடி வளர்த்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. அதேபோல் பெங்களூரு அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், பேருந்தில் செடி வளர்த்து வருகிறார்.

பிஜய் பால்

பெங்களூரு, கவல் பைலசந்த்ரா – யஷ்வந்த்பூர் ரூட்டில் பேருந்து ஓட்டுநராகா பணியாற்றி வருபவர் நாராயணப்பா. கடந்த 3 ஆண்டுகளாக இவர் ஓட்டுநர் இருக்கை மற்றும் முன் கண்ணாடி இருக்கும் பகுதியில் செடிகளை வளர்த்து பராமரித்து வருகிறார். கண்ணாடி முன் பகுதியில் மட்டும் 14 செடிகளை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர், பசுமையின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்துவது அவசியமானது. நம் சுற்றுச்சூழலை பசுமையாக வைத்திருந்தால்தான் அடுத்த தலைமுறையினர் நிம்மதியுடன் வாழ முடியும். எனவே பசுமையின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே இந்த முயற்சியில் ஈடுபட்டேன் என தெரிவித்துள்ளார்.