×

அரசு பள்ளியில் 5 வருடமாக ஆசிரியர் இல்லாததால், அதிரடி முடிவெடுத்த ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி!?

அரசு பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியர் இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் மனைவியே ஆசிரியராக பணிபுரிந்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசம்: அரசு பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியர் இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் மனைவியே ஆசிரியராக பணிபுரிந்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் அஷ்ராப் என்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த 2016ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தில் அப்பர் சபன்சிரி மாவட்டத்துக்கு நீதித்துறை நடுவராகவும் நியமிக்கப்பட்டார். இவருக்கு ருகி என்ற மனைவி உள்ளார். ருகி
 

அரசு பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியர் இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் மனைவியே ஆசிரியராக பணிபுரிந்து  வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அருணாச்சல பிரதேசம்:  அரசு பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியர் இல்லாததால் மாவட்ட ஆட்சியரின் மனைவியே ஆசிரியராக பணிபுரிந்து  வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டேனியல் அஷ்ராப் என்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த 2016ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தில் அப்பர் சபன்சிரி மாவட்டத்துக்கு நீதித்துறை நடுவராகவும்  நியமிக்கப்பட்டார். இவருக்கு ருகி என்ற மனைவி உள்ளார். ருகி கணவருடன்  அப்பர்  சபன்சிரியில் தங்கி வந்துள்ளார்.  இது பின் தங்கிய மாவட்டம் என்பதால், இணைய வசதி, சாலை வசதி, ரயில் வசதி போன்றவை இங்கு கிடையாது. 

இந்நிலையில் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 12 வகுப்பில் கடந்த 5 வருடங்களாக இயற்பியல் ஆசிரியர் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதையறிந்த ஐஏஎஸ் அதிகாரி டேனியல் மனைவி ருகி, தானே மாணவர்களுக்குப் பாடம் எடுக்க முன்வந்துள்ளார். இவர்  பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது, யூடியூப் வீடியோக்கள் மூலமும் பாடம் நடத்தி வருகிறார். அப்பர் சபன்சிரியில் இருக்கும் நெட்வொர்க் பிரச்னையால்  ருகி டெல்லி சென்று யூடியூப் வீடியோக்களை டவுன்லோடு செய்து வந்து மாணவர்களுக்குக்  கல்வி கற்று கொடுக்கிறார். 

இவரின் இந்த முயற்சியால் கடந்த ஆண்டு  17 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற இந்த பள்ளியில்  இந்த ஆண்டு 92 மாணவர்களின் 74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாணவர்களுக்கு எளிதான முறையில் ருகி பாடம்  எடுப்பதாகவும், அவர் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதிலை அளித்தால் சாக்லெட்டுகள், பரிசுப்பொருட்கள் வழங்கி ஊக்கப்படுத்துவார் என்று மாணவர்கள் உற்சாகமுடன் கூறுகின்றனர். 

பொறியியல் பட்டதாரியான ருகி கணவருடன் வசிப்பதற்காக வேலையைவிட்ட  நிலையில், தற்போது மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதன் மூலம் அவரது தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.