×

அரசு அமைப்புகளுக்கு கடனில் விமான டிக்கெட் வழங்குவது நிறுத்தம்- ஏர் இந்தியா

அரசு அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடனில் விமான டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கடனில் விமான டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் அன்றாடம் விமான சேவைகளை இயக்குவதற்கே படாதபாடு பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரமாக முயற்சி
 

அரசு அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு  கடனில் விமான டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு அமைப்புகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு  கடனில் விமான டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனம் அன்றாடம் விமான சேவைகளை இயக்குவதற்கே படாதபாடு பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரமாக முயற்சி வருகிறது. பணியாளர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாமல் திணறிவரும் ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்துள்ள அரசு அமைப்புகளுக்கு டிக்கெட் வழங்க மாட்டோம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பல்வேறு அரசு அமைப்புகள் சுமார் ரூ.268 கோடிக்கு டிக்கெட் கட்டணத்தை நிலுவையில் வைத்துள்ளதாகவும், இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள ஏர் இந்தியா,  ஏற்கனவே கடனில் வழங்கிய டிக்கெட்டுகளுக்கு தொகையை அரசு அமைப்புகள் செலுத்தாத வரை கடனில் புதிதாக டிக்கெட் வழங்கப்படாது என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. 

சிபிஐ, அமலாக்கத்துறை, சுங்கத்துறை , எல்லை பாதுகாப்பு படை, இந்திய ஆடிட் போர்டு, மத்திய பாதுகாப்பு தணிக்கை அமைப்பு உள்ளிட்ட அரசு அமைப்புகளை சேர்ந்தவர்கள், தங்கள் பணி நிமித்தம் வெளியூர் செல்ல ஏர் இந்தியாவில் தான் பயணிப்பர். அவர்கள் முறையாக கட்டணத்தை செலுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுபோன்ற அறிவிப்பை ஏர் இந்தியா அறிவித்துள்ளது.