×

அம்பானி மகளின் ஆடம்பர திருமணம்: ஒரு திருமண அழைப்பிதழின் விலை எவ்வளவு தெரியுமா? வைரலாகும் வீடியோ!

பிரபல தொழிலதிபர் அம்பானி மகளின் திருமணம் அழைப்பிதழ் செலவு குறித்த விபரம் வெளியாகியுள்ளது. மும்பை: பிரபல தொழிலதிபர் அம்பானி மகளின் திருமணம் அழைப்பிதழ் செலவு குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரபல பணக்காரரும் தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஊரே வியக்கும்படி மிகப் பிரம்மாண்டமாக அரங்கேறியது. இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பிரமோலை காதலித்து வந்தார். இதையடுத்து இவர்களது திருமண நிச்சயதார்த்தம்
 

பிரபல தொழிலதிபர் அம்பானி மகளின் திருமணம் அழைப்பிதழ் செலவு குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

மும்பை: பிரபல தொழிலதிபர் அம்பானி மகளின் திருமணம் அழைப்பிதழ் செலவு குறித்த விபரம் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பிரபல பணக்காரரும் தொழிலதிபர் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஊரே வியக்கும்படி மிகப் பிரம்மாண்டமாக அரங்கேறியது. இஷா அம்பானி, பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பிரமோலை காதலித்து வந்தார்.

இதையடுத்து இவர்களது திருமண  நிச்சயதார்த்தம் இத்தாலியில் உள்ள லேக் கோமோ என்ற பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் தொடர்ந்து 3 நாட்கள்  நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்திற்கு மட்டும் கோடி கணக்கில் செலவானதாக கூறப்பட்டது. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இஷா- ஆனந்த் திருமணத்திற்கான அழைப்பிதழ் வேலைகள் முடிந்து விட்டன. 

இதன் காரணமாக திருமண அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காகக் குடும்பத்தினருடன் அம்பானி கேதார்நாத் கோயிலுக்கும் சென்றார். அக்டோபர் 29ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்ற அம்பானி சுமார் 20 நிமிடங்கள் அங்குப் பூஜைகள் செய்துவிட்டு, ஒரு கோடி காசோலையை நன்கொடையாகவும் அளித்துள்ளார்.

இந்நிலையில்  இஷா – ஆனந்த் திருமணம் அழைப்பிதழ் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தங்கத்திலேயே அலங்கரிக்கப்பட்டுள்ள இந்தத் திருமண அழைப்பிதழ் ஒன்றின் செலவு மட்டுமே 1 லட்சத்திற்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.