×

அமெரிக்கத் தூதரகம் இந்தியாவுக்கு வந்த வரலாறு தெரியுமா!?

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு போக விரும்பும் எல்லோரும் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அமெரிக்க காண்ஸ்லேட் ஜெனரல் அலுவலகத்துக்கு வந்து,அதன் வாசலில் உள்ள பிளாட்பாரத்தி இரவு பகலாக தவம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு போக விரும்பும் எல்லோரும் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அமெரிக்க காண்ஸ்லேட் ஜெனரல் அலுவலகத்துக்கு வந்து,அதன் வாசலில் உள்ள பிளாட்பாரத்தி இரவு பகலாக தவம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். இது 1969-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி தொடங்கிய கதை.அதற்கு முன்
 

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு போக விரும்பும் எல்லோரும் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அமெரிக்க காண்ஸ்லேட் ஜெனரல் அலுவலகத்துக்கு வந்து,அதன் வாசலில் உள்ள பிளாட்பாரத்தி இரவு பகலாக தவம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.

தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு போக விரும்பும் எல்லோரும் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் அமெரிக்க காண்ஸ்லேட் ஜெனரல் அலுவலகத்துக்கு வந்து,அதன் வாசலில் உள்ள பிளாட்பாரத்தி இரவு பகலாக தவம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள்.

இது 1969-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி தொடங்கிய கதை.அதற்கு முன் அமெரிக்க தூதரகம் எங்கே இருந்தது தெரியுமா? சென்னைக்கு அமெரிக்கர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே வந்து விட்டார்கள். 

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன்,கல்கத்தாவில் வியாபாரம் செய்துகொண்டு இருந்த பெஞ்சமின் ஜோய் என்பவரை அமெரிக்கவின் இந்திய தூதராக நியமித்திருக்கிறார்.ஆனால்,ஆங்கில அரசு அவரை அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கன் கமர்ஷியல் ஏஜெண்ட் என்றுதான் அறியப்பட்டார்.அவர் கல்கத்தாவில் இருந்தபடி சென்னை வியாபாரத்தை கவனிக்க முடியாததால் 1794-ல் வில்லியம் அபோட் என்பவரை அன்றைய மெட்ராஸ் நகரின் கமர்ஷியல் ஏஜெண்ட் ஆக நியமிக்கிறார். 

அவர் இலக்கம் 1/சென்னை சைனாபஜாரில் இருந்த கட்டிடத்தில் தன் அலுவலகத்தை அமைத்துக்கொண்டார்.1906-ம் ஆண்டுவரை அந்த பதவியில் சென்னையில் வியாபாரம் செய்துகொண்டிருந்த அமெரிக்க வியாபாரிகளே தூதர் பொறுப்பை வகித்தார்கள்.1906-ல் ஆங்கில அரசு அமெரிக்காவுக்குத் தூதரக அந்தஸ்தை அளித்தது.

அப்படி அதிகாரப் பூர்வமாக வந்த அரசு சம்பளத்தில் வேலை செய்த முதல் தூதர் நந்தானியல் ஸ்டீவர்ட்.அமெரிக்க தூதரகம் இயங்கிய அந்தக்கட்டிடத்தை 1939-ல் ஈஐ.டி பாரி கம்பெனி வாங்கி இடித்துவிட்டு அங்கே இன்றைய டேர் ஹவுசை கட்டியது.அதன் மூன்றாவது தளத்தில் அமெரிக்க தூதரகம் இயங்கத் தொடங்கியது.

1942-லிருந்து 52 வரை இதே கட்டத்தில்தான் இயங்கியது.இந்தக் காலகட்டத்தில் இந்தியா சுதந்திர நாடாகிவிட்டது.இடப்பற்றாக்குறையால் அமெரிக்க தூதரகம் டேர் ஹவுசிலிருந்து இடம் மாறி சென்னை அண்ணா சாலையில் இப்போது பேங்க் ஆஃப் அமெரிக்கா இருக்கும் கட்டிடத்திற்கு இடம் மாறியது.

இது ராய் ஈ.பி போபர் காலத்தில் நடந்தது.அதற்கு பிறகுதான் இப்போதிருக்கும் இடத்தில் புதியகட்டிடம் கட்டி அமெரிக்க தூதரகம் குடியேறியது. தென்னிந்தியாவுக்கான கான்ஸ்லேட் ஜெனரல் அலுவலகம் என்பதால் மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் பேர் இங்கே வருவதாக சொல்கிறார்கள். எல்லோருக்கும்  டாலர் கனவு… சும்மா இருக்க விடுமா!