×

அமித்ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம்!

பணி ஓய்விற்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் கடந்த 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றார். இதை தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயரிய பதவி வகித்துள்ள இவர், பணி ஓய்விற்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் அவரின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் தற்போது 67 வயதாகும் விஜயகுமார் ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாத பகுதிகளில்
 

பணி ஓய்விற்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் கடந்த  1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகப் பதவியேற்றார்.  இதை தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயரிய பதவி வகித்துள்ள இவர், பணி ஓய்விற்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். சமீபத்தில்  அவரின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. 

இந்நிலையில் தற்போது 67 வயதாகும் விஜயகுமார்  ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சலைட், மாவோயிஸ்ட் பயங்கரவாத பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்க உள்துறை அமைச்சகத்தில்  சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் சிறப்பு அதிரடிப் படைக்கு தலைமை தாங்கிய இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் ஆண்டு தேதி வீரப்பனை சுட்டுக்கொன்று பலரின் பாராட்டைப்  பெற்றது குறிப்பிடத்தக்கது.