×

அதெல்லாம் பொய்.. நம்பாதீங்க….. இன்னைக்குள்ள வருமான வரி கணக்கு தாக்கல் செய்து விடுங்கள்…. வரி துறை எச்சரிக்கை….

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல் உண்மையல்ல. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதியோடு (இன்று) முடிவடைகிறது என வரி துறை விளக்கம் கொடுத்துள்ளது. 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீடித்தது. இறுதியாக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு மேல்
 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல் உண்மையல்ல. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதியோடு (இன்று) முடிவடைகிறது என வரி துறை விளக்கம் கொடுத்துள்ளது.

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பலமுறை நீடித்தது. இறுதியாக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு மேல் கால அவகாசம் கிடையாது என கடந்த மாதம் வரி துறை கண்டிப்பாக கூறி விட்டது. வரி துறை வழங்கிய காலக் கெடு இன்றுடன் முடிவடைகிறது.

ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் சம்பாதிப்பவர்கள் அனைவரும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்று முடிவடைவதால் கடந்த சில தினங்களாக நிறைய பேர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில்,  சமூக வலைதளங்களில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகிறது.

இது குறித்து வரி துறை விளக்கம் கொடுத்துள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தி போலி. ஆகஸ்ட் 31ம் தேதியோடு (இன்றுடன்) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைகிறது. கால அவகாசம் நீடிக்கப்படாது என வரி துறை தெளிவுப்படுத்தியுள்ளது.

அதனால இதுவரை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் இன்றுக்குள் எப்படியேனும் வருமான வரி கணக்கை தாக்கல் செய்து விடுங்கள். நாளைக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்தால் கூட அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்