×

அதிக வேலை வாங்கி டார்ச்சர் | முதலாளியை குடும்பத்தோடு கடத்திய வேலைக்காரன்!

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தன்னை அளவுக்கு அதிகமாக வேலை வாங்கி டார்ச்சர் செய்த வீட்டின் உரிமையாளரை, அதே வீட்டில் வேலை செய்து வருபவர் கடத்திச் சென்றுள்ளது டெல்லிவாசிகளிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் கோஷ்லா. தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தன்னை அளவுக்கு அதிகமாக வேலை வாங்கி டார்ச்சர் செய்த வீட்டின் உரிமையாளரை, அதே வீட்டில் வேலை செய்து வருபவர்
 
தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தன்னை அளவுக்கு அதிகமாக வேலை வாங்கி டார்ச்சர் செய்த வீட்டின் உரிமையாளரை, அதே வீட்டில் வேலை செய்து வருபவர் கடத்திச் சென்றுள்ளது டெல்லிவாசிகளிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் கோஷ்லா.

91 வயதான இவரும், இவரது மனைவியும் தெற்கு டெல்லியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த கிஷன் என்பவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிருஷ்ணனின் வீட்டில் பணியாற்றி வருகிறான். கிருஷ்ணன் வேலை வாங்கிய விதத்தில் வேலைக்காரன் கிஷன் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

கடந்த சனிக் கிழமை பிற்பகலில் வீட்டு வேலைக்கு வந்த கிஷன் கிருஷ்ணனையும் அவரது மனைவியையும் 5 பேரின் உதவியோடு அடித்து சுயநினைவு இழக்கச் செய்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரையும் அடித்து விட்டு, பின் டெம்போவில் குளிர் சாதனப் பெட்டியை எடுத்து வந்து அதனுள் கிருஷ்ணனை வைத்து கடத்திச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்ற போதிலும் , கடத்தல் சம்பவம் இதுவே முதன் முறை என அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். கடத்தப்பட்ட 91 வயதான கிருஷ்ணனையும், கடத்தியதாகக் கூறப்படும் கிஷனையும் போலீசார் தேடி வருகின்றனர்.